உலகின் சராசரி வெப்பநிலை தொடர்ந்து அதிகரிப்பு ; ஐ.நா எச்சரிக்கை
உலக சுற்றுச்சூழல் தினமான நேற்று முன் தினம் குட்டரெஸ் ஆற்றிய உரையில், கடந்த மே மாதம் உலகிலேயே அதிக வெப்பமான மாதமாக இருந்ததுடன் கடந்த 12 மாதங்களில் வெப்பநிலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
உலக சராசரி வெப்பநிலை 1.5ஐ தாண்டுவதற்கு 80 சதவீதம் வாய்ப்பு உள்ளது. அடுத்த 5 ஆண்டுகளில் டிகிரி செல்சியஸ் (2.7 டிகிரி ஃபாரன்ஹீட்) என்று உலக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பருவநிலை மாற்றத்தின் தாக்கம் உலகம் முழுவதும் நேரடி விளைவுகளை ஏற்படுத்தத் தொடங்கியுள்ளது. வழக்கத்திற்கு மாறாக அதிக மழையும், அதிக வெப்பமும் மக்களை பாதிக்கத் தொடங்கியுள்ளன.
லத்தீன் அமெரிக்க நாடுகளில் வெள்ளம், துபாய், ஆப்கானிஸ்தான், ஆப்பிரிக்க நாடுகளில் வறட்சி, இந்தியாவில் அதிகரிக்கும் வெப்ப அலைகள் எதிர்கால பேரிடர்களின் எச்சரிக்கை. வரலாறு காணாத வெப்பத்தை இந்தியா சந்தித்துள்ளது.
May 2024 was the hottest May in history, marking 12 straight months of hottest months ever.
Our planet is telling us something, but we don’t seem to be listening.
It’s time to mobilise, act & deliver.
It’s #ClimateAction crunch time. pic.twitter.com/7IIy5mJaxg
— António Guterres (@antonioguterres) June 5, 2024
இந்தியாவில் இந்த ஆண்டு மட்டும் 250க்கும் மேற்பட்டோர் வெப்ப வாதத்தால் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரஸ் கவலையளிக்கும் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார்.
முன்னறிவிப்பை மேற்கோள் காட்டி அவர் பேசியுள்ளார். முன்னதாக பாரீஸ் பருவநிலை ஒப்பந்தத்தில், 2030ஆம் ஆண்டு வரை உலகின் சராசரி வெப்பநிலை 1.5 செல்சியஸை தாண்டாமல் இருக்க வேண்டும் என்பதே குறிக்கோளாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
There is an 80 percent likelihood that the annual average global temperature will temporarily exceed 1.5°C above pre-industrial levels for at least one of the next five years, according to a new report from the World Meteorological Organization (@WMO).https://t.co/B4Yoek5N33
— World Meteorological Organization (@WMO) June 5, 2024