;
Athirady Tamil News

தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைவராக மோடி தேர்வு: குடியரசு தலைவரை சந்திக்க திட்டம்

0

தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைவராக நரேந்திர மோடி ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இந்திய நாடாளுமன்ற தேர்தலின் முடிவுகள் வெளியாகி அதில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் 292 இடங்களையும், காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி 234 இடங்களையும் கைப்பற்றியுள்ளது.

இந்த தேர்தலில் எந்தவொரு கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை.

பாஜக மட்டும் தான் அதிகபட்சமாக 240 இடங்களை கைப்பற்றி உள்ளது, இருப்பினும் ஆட்சி அமைக்க 272 இடங்கள் அவசியம் என்ற நிலையில், TDP, JDU, SHS ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் பாஜக மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்க தயாராகி வருகிறது.

இந்நிலையில் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் முதல் ஆலோசனைக் கூட்டம் டெல்லி இன்று நடைபெற்றது.

மோடியின் தலைமையில் அவரது இல்லத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள 21 தலைவர்கள் கலந்து கொண்டனர்.

அத்துடன் இந்த கூட்டத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைவராக நரேந்திர மோடி ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இதன்மூலம் இந்தியாவில் நேருக்கு பிறகு இரண்டாவது தலைவராக நரேந்திர மோடி தொடர்ந்து 3 வது முறையாக பிரதமராக பதவியேற்க உள்ளார்.

கூட்டணி கட்சிகளின் ஆதரவு கடிதத்துடன் புதிய ஆட்சி அமைக்க உரிமை கோரி இன்று குடியரசு தலைவரை சந்திக்க பாஜக திட்டமிட்டு இருப்பதாகவும், ஜூன் 8ம் திகதி பதவியேற்பு விழா இருக்கும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.