;
Athirady Tamil News

ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளரை நிறுத்துவது தொடர்பான கலந்துரையாடல்

0

ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளரை நிறுத்துவது தொடர்பான கலந்துரையாடல்
நேற்றையதினம் யாழ்ப்பாணத்தில் சிவில் சமூகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்றது.

குடிமக்கள் சமூகக் கூட்டிணைவின் வவுனியாத் தீர்மானத்தின் தொடர்ச்சியாக இரண்டாவது பொதுச்சபைக் கூட்டம் யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் நேற்று(5) இடம்பெற்றது.

குறித்த கலந்துரையாடலில் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி பேரியக்க இணை ஒருங்கிணைப்பாளர்களான வேலன் சுவாமிகள் மற்றும் சீலன், அரசியல் ஆய்வாளர் சட்டத்தரணி சி.அ.யோதிலிங்கம், நிலாந்தன், பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம், இரேனியல் செல்வின், கிழக்கு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், யாழ்ப்பாணம் பல்கலைக்கழகம் மாணவர் ஒன்றியம், வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகள் அமைப்புக்கள், வடக்கு, கிழக்கு சிவில் அமைப்புக்கள், குரலற்றவர்களின் குரல் அமைப்பு, சமூக விஞ்ஞான ஆய்வு மையம், இரணைமடு கமக்கார அமைப்பு, கிழக்கு தமிழ் விவசாயிகள் அமைப்பு, யாழ் வணிகர் கழகம், தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கம், மயிலத்தமடு மேய்ச்சல் தரை போராட்ட குழு, ஊடகவியலாளர்கள்,பொது, சமூக செயற்பாட்டாளர்கள், வண பிதாக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

அதில், இதுவரை வடக்கு கிழக்கு சிவில் அமைப்புக்களின் கூட்டிணைவு என்று அழைக்கப்பட்ட தமிழ் குடிமக்கள் சமூகத்தின் கட்டமைப்பை இனிமேல், “தமிழ் மக்கள் பொதுச்சபை” என அழைப்பது என்று தீர்மானிக்கப்பட்டது.

அதிபர் தேர்தலுக்கான தமிழ்ப் பொதுவேட்பாளர் விடயத்தில் அரசியல் கட்சிகள் தங்கள் முடிவுகளை உத்தியோகபூர்வமாக அறிவித்து முடித்தவுடன் பரஸ்பர புரிந்துணர்வு அடிப்படையில் ஒரு பொதுக்கட்டமைப்பை உருவாக்கி செயற்படுவது என ஏகமனதாக முடிவெடுக்கப்பட்டது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.