மீன்களின் விலை பாரியளவில் அதிகரிப்பு
நாட்டில் கடந்த சில நாட்களாக நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக கடற்றொழில் நடவடிக்கைகளில் ஈடுபடுவதனைத் தவிர்க்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் (Meteorological Department) கடற்றொழிலாளர்களை அறிவுறுத்தியுள்ளது.
கடற்றொழில் நடவடிக்கைகளில் ஈடுபடாத காரணத்தினால் மீன்களின் விலை சடுதியாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த விலை அதிகரிப்பானது நுகர்வோரை மிகவும் பாதித்துள்ளதாக விற்பனையாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
மீன் விற்பனை நிலையத்தில்
இதேவேளை காலி (Galle) பிரதான மீன் விற்பனை நிலையத்தில் ஒரு கிலோகிராம் பலையா மீனின் விலை 1,300 ரூபாவாக பதிவாகியுள்ளது.
அத்துடன் ஒரு கிலோகிராம் கெலவல்லா மீனின் விலை 1,400 ரூபாவாகவும், ஒரு கிலோகிராம் டெலியா மீனின் விலை 1,300 ரூபாவிற்கும் விற்பனை செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.