;
Athirady Tamil News

தனது அரசியல் அலுவலகத்தை திறந்து வைத்த ஜனாதிபதி

0

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கொழும்பில் தனது அரசியல் அலுவலகத்தை இன்று (06) திறந்து வைத்துள்ளார்.

புதிய அலுவலகம், கொழும்பு சேர் எர்னஸ்ட் டி சில்வா மாவத்தையில் அமைக்கப்பட்டுள்ளதுடன் எதிர்கால அரசியல் நடவடிக்கைகள் இந்த அலுவலகத்தின் ஊடாக மேற்கொள்ளப்படும் என ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

நாரஹேன்பிட்டி அபயாராமாதிபதி, மேல் மாகாண பிரதம சங்கநாயக்க, கொழும்பு பல்கலைக்கழக வேந்தர் வண. கலாநிதி முருத்தெட்டுவே ஆனந்த தேரர், கொள்ளுப்பிட்டி வாழுகாராம மகா விகாரை உட்பட ஐந்து மகா விகாரைகளின் விகாராதிபதி, ஊவா பிராந்திய பிரதம சங்கநாயக வண, மஹரகம நந்த நாயக்க தேரர் , உள்ளிட்ட மகா சங்கத்தினர் இதன்போது பிரித் பாராயணம் செய்து ஜனாதிபதிக்கு ஆசி வழங்கியதுடன் ஏனைய சமயத் தலைவர்களும் சமய வழிபாடுகளை நடத்தி ஆசிர்வாதங்களை வழங்கினர்.

ஜனாதிபதியின் அரசியல் அலுவலகத்தை நிறுவுவதற்கான ஆரம்ப நடவடிக்கைகள் ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான வஜிர அபேவர்தனவின் தலைமையில் மேற்கொள்ளப்பட்டது.

பேராசிரியர் மைத்திரி விக்ரமசிங்க, பிரதமர் தினேஷ் குணவர்தன மற்றும் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்பாட்டாளர்கள் பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.