இஸ்ரேலுக்கு புதிதாக ஒரு சிக்கல்… நிலக்கரி வழங்குவதை நிறுத்த கோரிக்கை வைத்த நாடு
காஸாவில் பலி எண்ணிக்கை அதிகரித்து வரும் சூழலில் இஸ்ரேலுக்கு நிலக்கரி விற்பனையை கட்டுப்படுத்துவதற்கு கொலம்பியாவின் வர்த்தக அமைச்சகம் அழைப்பு விடுத்துள்ளது.
ஏற்றுமதியை கட்டுப்படுத்த வேண்டும்
இஸ்ரேலை தனிமைப்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்படும் இந்த முயற்சிக்கு ஆதரவளிக்க வேண்டும் என்றும் கொலம்பியா வேண்டுகோள் விடுத்துள்ளது.
இஸ்ரேலுக்கான நிலக்கரி ஏற்றுமதியை கட்டுப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை சிறப்பு குழு ஒன்றிற்கு கொலம்பியாவின் வர்த்தக அமைச்சகம் முன்வைத்துள்ளது. நாட்டின் சுங்க வரி மற்றும் வெளிநாட்டு வர்த்தகத்தை கட்டுப்படுத்தும் குழு அது என்றே கூறப்படுகிறது.
லத்தீன் அமெரிக்கா முழுவதும் உள்ள அரசாங்கங்களுடனான இஸ்ரேலின் உறவுகள் இந்த ஆண்டு மிகவும் மோசமடைந்துள்ளன. ஆனால் இதுவரை முக்கியமாக வர்த்தகத் தடைகளை விட இராஜாங்க நடவடிக்கைகள் மூலம் அது வெளிப்படுத்தப்பட்டு வந்துள்ளது.
கொலம்பியாவை பொறுத்தமட்டில் இஸ்ரேலுக்கான மிக முக்கியமான நிலக்கரி ஏற்றுமதியாளர்களில் ஒருவர் என்றே கூறப்படுகிறது. கடந்த ஓராண்டில் மட்டும் 450 மில்லியன் டொலருக்கான நிலக்கரி ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.
போர் முடிவுக்கு வரவேண்டும்
ஆனால் தற்போது நிலக்கரி ஏற்றுமதியில் கட்டுப்பாடு என்பது காஸாவில் போர் முடிவுக்கு வரவேண்டும் என்ற ஒரே இலக்குடன் மட்டுமே என்றும் கொலம்பியா விளக்கமளித்துள்ளது.
அத்துடன், போர் முடிவுக்கு வரும்வரையில் இந்த கட்டுப்பாடு தொடரும் என்றும் கொலம்பியா குறிப்பிட்டுள்ளது. இதனிடையே, துருக்கி கடந்த மாதமே இஸ்ரேலுக்கான வர்த்தகத்தில் பெரும்பகுதியை தடுத்து நிறுத்தியுள்ளது.
கொலம்பியாவும் இஸ்ரேலும் வரலாற்று ரீதியாக நல்லுறவைக் கொண்டிருக்கும் நாடுகள், மட்டுமின்றி 2020 முதல் தடையற்ற வர்த்தக உடன்படிக்கையைக் கொண்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.