ரூ 3.8 கோடிக்கு நீச்சல் குளம், ஆடம்பர தேநீர் கிண்ணம்: 5 முறை விமர்சனத்தை சந்தித்த ரிஷி சுனக்
பிரித்தானியா பிரதமராக 2022 அக்டோபர் மாதம் பொறுப்புக்கு வந்த பின்னர், 5 முறை கடும் விமர்சனங்களை ரிஷி சுனக் எதிர்கொண்டுள்ளதாக பட்டியலிடப்பட்டுள்ளது.
கடும் விமர்சனங்களை எதிர்கொண்டார்
பிரித்தானிய அரசாங்கம் முன்வைத்த படிப்புக்கு பிந்தைய விசா மீதான கட்டுப்பாடுகள் தொடர்பில் பிரதமர் ரிஷி சுனக் கடும் விமர்சனங்களை எதிர்கொண்டார். தொடர்புடைய விசாவினால் பட்டதாரிகள் தங்கள் பட்டப்படிப்பை முடித்த பிறகு இரண்டு ஆண்டுகள் வரை தங்கி வேலை செய்ய முடியும்.
இதில் கட்டுப்பாடுகளை கொண்டுவரவே ரிஷி சுனக் திட்டமிட்டார். ஆனால் அமைச்சரவையில் இருந்து எழுந்த கடும் எதிர்ப்பால் அந்த திட்டம் கைவிடப்பட்டது. இரண்டாவதாக பிரித்தானியாவை உலுக்கிய அஞ்சல் அலுவலக முறைகேடு.
கடந்த ஜனவரி மாதம் தபால் துறை ஊழலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் ஒரு சட்டத்தை பிரதமர் முன்மொழிந்தார். இந்த ஊழலில் நூற்றுக்கணக்கான ஊழியர்கள் பாதிக்கப்பட்டனர். அவர்கள் தபால் அலுவலகம் பயன்படுத்தும் மென்பொருளில் உள்ள சிக்கல்களால் தவறாக குற்றம் சாட்டப்பட்டனர்.
இந்த நிலையில் பிரதமர் சுனக்கால் முன்மொழியப்பட்ட சட்டம் காரணமாக 75,000 பவுண்டுகள் முன்பணமாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. மூன்றாவதாக வெளிநாட்டு மாணவர்களுக்கு ஆங்கில மொழி அறிவு சோதனையில் நடந்த முறைகேடு.
2023 மார்ச் மாதம் சர்வதேச மாணவர்கள் குழு ஒன்று பிரதமர் ரிஷி சுனக் பார்வைக்கு ஒரு மனு அளித்தனர். அதில் 2014 ஆம் ஆண்டுக்கு முந்தைய ஆங்கில மொழி சோதனை தொடர்பான முறைகேடைத் தொடர்ந்து தங்களின் விசாக்கள் ரத்து செய்யப்பட்டது குறித்து முறையிட்டனர்.
தொடர்புடைய மொழி அறிவு சோதனை மையங்களால் ஆயிரக்கணக்கான மாணவர்கள் நாட்டைவிட்டு வெளியேற்றப்படும் நிலைக்கு தள்ளப்பட்டனர். இதில் முறைகேட்டில் ஈடுபட்டதாக குறிப்பிடப்பட்ட மாணவர்கள் தங்களை நிரபராதி என அறிவிக்க ரிஷி சுனக்கின் உதவியை நாடினர்.
தேநீர் கிண்ணங்களில்
நான்காவதாக, பிரித்தானியாவில் பல பகுதிகளில் வெப்ப அலையும் வறட்சியும் காணப்பட்ட 2022ல், ரிஷி சுனக் சுமார் 3.8 கோடி ரூபாய் செலவிட்டு வடக்கு யார்க்ஷயரில் உள்ள அவரது இல்லத்தில் ஆடம்பரமான நீச்சல் குளம் ஒன்றை நிறுவினார் என்பது கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
5வதாக 2022ல் ரிஷி சுனக்கின் மனைவி அக்ஷதா மூர்த்தி, ஆடம்பரமான தேநீர் கிண்ணங்களைப் பயன்படுத்தியதற்காக ஒன்லைனில் விமர்சனங்களை எதிர்கொண்டார்.
உண்மையில் தமது குடியிருப்புக்கு வெளியே புகைப்படக் கலைஞர்களை அவர் தேநீருடன் உபசரித்துள்ளார். அந்த செயல் பலராலும் பாராட்டப்பட்டது. ஆனால் விமர்சகர்களின் பார்வை அந்த தேநீர் கிண்ணங்களில் பதிந்தது.
குறித்த தேநீர் கிண்ணங்கள் ஒவ்வொன்றும் தலா 38 பவுண்டுகள் என்பதும் வெளிச்சத்துக்கு வந்தது.