ஜப்பானில் குறைந்து வரும் பிறப்பு விகிதம் – அரசாங்கம் எடுத்துள்ள திடீர் முடிவு
ஜப்பானில் தேசிய பிறப்பு விகிதத்தை உயர்த்துவதற்கான அரசாங்க முயற்சிகளின் ஒரு பகுதியாக, டோக்கியோ பெருநகர அரசாங்கம் டேட்டிங் செயலியை (Dating App) அறிமுகப்படுத்தவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ள Dating App
குறைந்து வரும் பிறப்பு விகிதத்தை அதிகரிப்பதற்காக தானாகவே களத்தில் இறங்கி டேட்டிங் செயலியை (Dating App) டோக்கியோ அரசாங்கம் அறிமுகம் செய்யவுள்ளது.
குறித்த செயலிக்கு நுழையும் போதும் குறிப்பிட்ட ஒரு சில கேள்விகளுக்கான பதிலை அளிக்க வேண்டும் என அறிவறுத்தப்பட்டுள்ளது.
பயனர்கள் சட்டப்பூர்வமாக தனிமையில் இருப்பதை நிரூபிக்கும் ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும். மற்றும் திருமணம் செய்து கொள்ளத் தயாராக இருப்பதாகக் கடிதத்தில் கையெழுத்திட வேண்டும்.
ஜப்பானிய டேட்டிங் செயலியில் ஒருவரின் வருமானத்தைக் குறிப்பிடுவது பொதுவானதாகும். ஆனால் டோக்கியோவிற்கு வருடாந்திர சம்பளத்தை நிரூபிக்க வரி சான்றிதழ் சீட்டு அவசியமாகும்.
டோக்கியோ பயன்பாட்டிற்கான பதிவு செயல்முறையின் ஒரு பகுதியாக பயனரின் அடையாளத்தை உறுதிப்படுத்த ஒரு நேர்காணல் வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு, ஜப்பானில் புதிதாகப் பிறந்த குழந்தைகளை விட இரண்டு மடங்கு அதிகமான இறப்புகள் பதிவாகியுள்ளன.
பிறப்புகள் தொடர்ந்து எட்டாவது ஆண்டாக 758,631 ஆக குறைந்துள்ளது, இது 5.1% சரிவு என்று அரசாங்கத்தின் ஆரம்ப தரவுகள் காட்டுகின்றன. இறப்பு எண்ணிக்கை 1,590,503 ஆக உள்ளது.
நாடு வளர்ந்து வரும் தொழிலாளர் பற்றாக்குறையை எதிர்கொள்கிறது, மேலும் குடும்பங்களுக்கான நிதி உதவி, குழந்தை பராமரிப்புக்கு தேவையான அனைத்து விதமான சலுகையும் வழங்குவதாக பிரதமர் ஃபுமியோ கிஷிடா உறுதியளித்துள்ளார்.
மேலும் இந்த செயன்முறையானது நம்பகத்தன்மை வாய்ந்தது எனவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.