;
Athirady Tamil News

மன அழுத்தத்தை போக்க அலுவலகத்தில் சீனர்கள் செய்யும் வித்தியாசமான செயல்!

0

இக் காலக்கட்டத்தில் எதையும் வித்தியாசமாக செய்தே பழகி போன சீனர்கள் மன அழுத்தத்தை போக்கவும் தங்களுக்கே உரிய பாணியில் புதிய முறையை கையாள துவங்கியுள்ளனர்.

அலுவலகத்தில் ஏற்படும் மன அழுத்தத்தை போக்க ஃபிட்ஜெட் ஸ்பின்னர், மெடிடேஷன் ஆப் உள்ளிட்டவைகளை கடந்து சீனர்கள் தற்போது வாழை சாகுபடியில் இறங்கியுள்ளனர்.

மேலும், இவ்வாறு செய்வது அந்நாட்டில் டிரெண்ட் ஆகி வருகிறது. இந்த டிரெண்ட்-இன் படி பணியாளர்கள் தங்களது அலுவலகத்தில் அவரவர் பணியாற்றும் மேஜையில், வாழை செடி ஒன்றை வாங்கி வந்து வளர்க்கினர்.

வழக்கமான வாழை சாகுபடி போன்றில்லாமல், இவர்கள் பச்சை நிறத்தில் உள்ள வாழை தார் ஒன்றை நீர் ஊற்றும் வசதி கொண்ட தொட்டியில் வைக்கின்றனர்.

பிறகு, ஒருவார காலத்திற்கு அவ்வப்போது பராமரிக்கும் போது, பச்சை நிற தாரில் இருந்து வாழை ஒவ்வொரு நாளும் படிப்படியாக வளர ஆரம்பிக்கிறது.

முதலில் பச்சை நிறத்தில் துவங்கி இறுதியில் இளம் மஞ்சள் நிறத்திற்கு வாழை பழமாக மாறுகிறது.

இந்த வழிமுறைகளை பார்க்கும் போது ஒவ்வொரு தருணமும் அளவில்லா மகிழ்ச்சியையும், சுவாரஸ்யத்தையும் அளிப்பதாக டிரெண்ட்-இல் பங்கேற்றவர்கள் ஆன்லைனில் தெரிவிக்கின்றனர்.

இந்த வழக்கம் சீனாவின் இன்ஸ்டாகிராம் போன்ற தளமாக செயல்பட்டு வரும் ஷாங்ஷூவில் வைரலாகி உள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.