சூடானில் வலுக்கும் போர் பதற்றம்: அதிகரிக்கும் உயிரிழப்புக்கள்
சூடானில் (Sudan) ஆர்.எஸ்.எப். துணை இராணுவ படையினர் கிராமம் ஒன்றிற்குள் புகுந்து தாக்குதல் நடத்தியதில் 100 க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தாக்குதல் சம்பவமானது சூடானின் கெசிரா மாகாணத்தில் உள்ள வாத் அல்-நவுரா என்ற கிராமத்தில் நேற்று முன் தினம் (5) இடம்பெற்றுள்ளது.
இந்த தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியவர்கள் உட்பட 100 க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர்.
சூடான் அரசு கடும் கண்டனம்
இதனையடுத்து இராணுவ படையினர் மேற்கொண்ட தாக்குதலுக்கு சூடான் அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
அதே சமயம் சூடான் இராணுவத்தினர் தங்கள் படைகளை தாக்க திட்டமிட்டதாகவும், அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் வாத் அல்-நவுரா கிராமத்தின் வடக்கு, மேற்கு மற்றும் தெற்கு பகுதிகளில் உள்ள இராணுவ படைத்தளங்கள் மீது தாக்குதல் நடத்தியதாகவும் ஆர்.எஸ்.எப். துணை ராணுவ படை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.