சுகாதார சேவை உத்தியோகத்தர்களுக்கான ஆட்சேர்ப்பு: நிதியமைச்சு வெளியிட்ட அறிவிப்பு
குடும்ப சுகாதார சேவை உத்தியோகத்தர்களை சேர்ப்பதற்கான நேர்முகத் தேர்வில் சித்தியடைந்து இதுவரை ஆட்சேர்ப்பு செய்யப்படாத விண்ணப்பதாரர்கள் தொடர்பில் சுகாதார அமைச்சிடம் இருந்து விசேட அறிக்கை கோரப்படும் என நிதியமைச்சு தெரிவித்துள்ளது.
ஆட்சேர்ப்பு செய்யப்படாத விண்ணப்பதாரர்கள் தொடர்பான விசேட அறிக்கை எதிர்வரும் ஜூலை மாதம் முதலாம் திகதி (01ஆம் திகதி) அழைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தகுதியான விண்ணப்பதாரர்கள்
மேலும், சேவைக்கு ஆட்சேர்ப்பு செய்யப்படாத இந்த முந்நூற்று பதினாறு பெண் விண்ணப்பதாரர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான அமைச்சரவைப் பத்திரம் பதினைந்து நாட்களுக்கு முன்னர் சமர்ப்பிக்கப்பட்டதாகவும், அது நிராகரிக்கப்படவில்லை எனவும், அதனை ஆராய்வதற்காக சமர்ப்பிக்கப்பட்ட கண்காணிப்புப் பத்திரம் மாத்திரமே நிராகரிக்கப்பட்டதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.
குடும்ப சுகாதார சேவை உத்தியோகத்தர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான நேர்முகத் தேர்வில் சித்தியடைந்த இரண்டாயிரத்து எண்ணூற்று முப்பத்தாறு (2836) விண்ணப்பதாரர்களில் 2500 விண்ணப்பதாரர்கள் இணைத்துக் கொள்ளப்பட்ட போதிலும், முந்நூற்று ஏழு தகுதியான விண்ணப்பதாரர்கள் இதுவரை சுகாதார அமைச்சினால் ஆட்சேர்ப்பு செய்யப்படவில்லை.
ஆட்சேர்ப்பு இடைநிறுத்தம்
நான்கு வருடங்களுக்கு முன்னர் குடும்ப சுகாதார சேவை உத்தியோகத்தர்களை ஆட்சேர்ப்பு செய்வதாக வர்த்தமானி அறிவித்தல் வெளியானதோடு நேர்முகத்தேர்வில் 2836 பேர் தெரிவு செய்யப்பட்டனர்.
அதன் பின்னர் இரண்டு கட்டங்களாக 2500மாணவிகள் உள்வாங்கப்பட்டுள்ளதுடன், எஞ்சிய 300 மாணவர்களுக்கான தகுதியுடைய மாணவர் சேர்க்கையை சுகாதார அமைச்சு இடைநிறுத்தியமை குறிப்பிடத்தக்கது.