25 வயதில் எம்.பி – மக்களவை தேர்தலில் வென்ற 3 இளம்பெண்கள் – யார் இவர்கள்!
25 வயதில் மக்களவை தேர்தலில் போட்டியிட்டு வென்ற 3 இளம் பெண்கள் இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளனர்.
மக்களவை தேர்தல்
இந்தியாவில் 7 கட்டங்களாக நடைபெற்ற மக்களவை தேர்தலின் முடிவுகள் நேற்று முன்தினம் வெளியாகின. இதில் மொத்தமுள்ள 543 தொகுதிகளில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 292 இடங்களிலும், காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி 234 இடங்களிலும் வென்றுள்ளது.
இந்த தேர்தலில் 25 வயதில் போட்டியிட்டு வென்ற 3 இளம் பெண்கள் இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளனர். அதில் பீகாரைச் சேர்ந்த சாம்பவி சவுத்ரி (25) தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் சமஸ்திபூர் தொகுதியில் போட்டியிட்டு வென்றுள்ளார். இவர் டெல்லியில் உள்ள பிரபல கல்லூரியில் சோசியாலஜி துறையில் பட்டம் பெற்றுள்ளார்.
இளம்பெண்கள்
அதேபோல் ராஜஸ்தான் மாநிலத்தில் பாரத்பூர் மக்களவை தொகுதியில் காங்கிரஸ் சார்பாகப் போட்டியிட்ட சஞ்சனா ஜாதவ் (25) என்ற இளம்பெண் வெற்றி பெற்றுள்ளார். முன்னதாக இவர் 2023 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு 409 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவினார்.
மேலும், உத்தரப்பிரதேசத்தின் மச்லிசார் தொகுதியில் சமாஜ்வாதி கட்சி சார்பாகப் போட்டியிட்ட பிரியா சரோஜ் (25) என்பவர் வெற்றி பெற்றுள்ளார். இவர் 3 முறை எம்பியாக இருந்த தூஃபானி சரோஜின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் மூவரும் 25 வயதில் மக்களவைக்கு தேர்வு செய்யப்பட்டிருப்பது அரசியலில் இளம் தலைமுறையினரை உத்வேகப்படுத்தியுள்ளது.