;
Athirady Tamil News

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் “எரிக் வாஸ்” (Eric Walsh) இந்துசமயத் தலைவர்களை இன்றைய தினம் வெள்ளிக்கிழமை நல்லை திருஞானசம்பந்தர் ஆதீனத்தில் சந்தித்து கலந்துரையாடினார்

0

ஆதீன முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள், செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறு.திருமுருகன், ஆன்மீகச்சுடர் ரிஷி தொண்டுநாதன் சுவாமிகள் ஆகியோருடன் நாட்டின் இன்றைய சூழ்நிலை தொடர்பாக கலந்துரையாடினார்.

நல்லை ஆதீன முதல்வர் கனடா நாட்டில் வாழும் எம்மக்களைக் கௌரவமாக அங்கு வழிநடத்துவதற்கு நன்றி கூறினார்.

மேலும் இக்கலந்துரையாடலில் பங்குபற்றிய மூவரும் இனப்பிரச்சனைத் தீர்வு தொடர்பாக கனடா இலங்கை அரசுடன் பேசவேண்டும் என்பதனை வலியுறுத்தினர்.

மேலும் கனடா துணைத்தூதரகத்தை வடக்கில் நிறுவி,மக்களுக்கு உதவவேண்டும் எனவும், கனடா தூதுவராலய விசா அலுவலகம் வடக்குப்பகுதியில அமையவேண்டிய அவசியத்தை விளக்கினர்.

தொடர்ந்து போரில் இறந்தவர்களுக்கு மனிதநேய அடிப்படையில் வழிபாடு செய்யும் உரிமையை எடுத்துரைத்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.