சுயேட்சை வேட்பாளராக களமிறங்கும் ரணில்
இவ்வருடம் செப்டெம்பர் மாதத்தின் பின்னர் இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தொடர்பில் பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன.
இந்த நிலையில், தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க(Ranil Wickremesinghe), எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச(Sajith Premadasa), மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க(Anura Kumara Dissanayaka) உள்ளிட்டோர் வேட்பாளர்களாக களமிறங்கவுள்ளனர் என்று வெளிப்படையான அறிவிப்புக்கள் வெளியாகியுள்ளன.
வேட்பாளர் ரணில்
எனினும், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச(Mahinda Rajapaksa) தலைமையிலான பொதுஜன பெரமுனவினரின் நிலைப்பாடு தொடர்பில் இதுவரை எவ்வித அறிவிப்புக்களும் வெளியாகவில்லை.
இந்தநிலையில், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்க சுயேட்சை வேட்பாளராக போட்டியிடுவார் என ஜனாதிபதியின் ஆலோசகர் பேராசிரியர் ஆஷு மாரசிங்க தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியின் புதிய அரசியல் அலுவலகத்தை கொழும்பில் 06ஆம் திகதி வியாழக்கிழமை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.