ரஷ்ய -உக்ரைன் போரில் நேரடியாக தலையிட்டுள்ள பிரித்தானியா: பழிவாங்குவதாக புடின் உறுதி
உக்ரைனுக்கு(Ukraine) எதிரான தனது போரில் பிரித்தானியா(Britan) நேரடியாக தலையிட்டுள்ளதாக குற்றஞ்சாட்டிய விளாடிமிர் புடின் பழிவாங்குவது உறுதி என தெரிவித்துள்ளார்.
மேலும், “பிரித்தானிய ஆயுதப் படைகள் ரஷ்ய இலக்குகளைத் தாக்கும் ஏவுகணைகளைக் குறிவைப்பதாகவும், சர்வதேச பத்திரிகையொன்றுக்கு அளித்த நேர்காணலின் போது குறிப்பிட்டுள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், ரஷ்யாவின் நிலைகளை குறிவைக்க அமெரிக்காவும் பிரான்சும் தனது ஆயுதப் படைகளைப் பயன்படுத்துகின்றது ரஷ்யாவின்(Russia) இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாடு அச்சுறுத்தலுக்கு இலக்கானால் அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவேன்.
உக்ரைன் போரில் நேரடி ஈடுபாடு
உக்ரைன் வீரர்கள் தொடர்பில் தமக்கு தெரியும் என்றும், தொலை தூர ஏவுகணைகளை பயன்படுத்தி அவர்களால் தனித்து தாக்குதல் தொடுக்க முடியாது அதற்கான அடுத்ததடுத்த நிலைகள் என்ன என்பது தமக்கு தெரியும்.
இதன் பின்னணியில் கண்டிப்பாக மேற்கத்திய நாடுகளின் ஈடுபாடு பதிவாகியுள்ளது.இந்த ஆயுதங்களை வழங்கியவர்களால் மட்டுமே, அதற்கான வழி முறைகளை உருவாக்க முடியும்.
ATACMS என்றால் அமெரிக்கா அதில் ஈடுபட்டிருக்கும் என்றும் Storm Shadow என்றால் அதில் பிரித்தானியா ஈடுபட்டிருக்கும்.” என புடின் தெரிவித்துள்ளார்.