ஜோ பைடன் உக்ரைன் அதிபரிடம் பகிரங்கமாக மன்னிப்பு: வெளியான காரணம்
உக்ரைன் அதிபரிடம் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் (Joe Biden) நேற்று (7) முதல் முறையாக பகிரங்கமாக மன்னிப்புக் கோரியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
வோலோடிமிர் செலென்ஸ்கியை, பைடன் பாரிஸில் சந்தித்த போதே மன்னிப்பை கோரியதாக தெரிவிக்கப்படுகின்றது.
அமெரிக்கா ஏற்கனவே உக்ரைனுக்காக அனுமதித்த இராணுவ உதவி இன்னும் உக்ரைனுக்கு அனுப்பப்படாமை தொடர்பிலேயே இந்த மன்னிப்பைக் கோரியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
உக்ரைனுக்கு ஆதரவு
உக்ரைனுக்கான 61 பில்லியன் டொலர் இராணுவ உதவிப் பொதியை காங்கிரஸில் பழமைவாத குடியரசுக் கட்சியினர் ஆறு மாதங்களாக நிறுத்தி வைத்துள்ளனர்.இதற்காக தாம் மன்னிப்பை கோருவதாக பைடன் கூறியுள்ளார்.
இருப்பினும், அமெரிக்க மக்கள் தொடர்ந்தும் உக்ரைனுக்கு ஆதரவாகவே செயற்படுகிறார்கள் எனவும் நாங்கள் தொடர்ந்தும் முழுமையாக உங்களுடன் இருக்கிறோம் என்றும் பைடன் செலென்ஸ்கியிடம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.