ஜேர்மனியில் கஞ்சா சட்டமயமாக்கப்பட்டதை தொடர்ந்து சாரதிகளுக்கு புதிய கட்டுப்பாடுகள்
இரண்டு மாதங்களுக்கு முன் ஜேர்மனியில் கஞ்சா சட்டமயமாக்கப்பட்ட நிலையில், தற்போது அது தொடர்பில் சாரதிகளுக்கு புதிய கட்டுப்பாடுகள் சில விதிக்கப்பட்டுள்ளன.
சாரதிகளுக்கு புதிய கட்டுப்பாடுகள்
ஜேர்மன் போக்குவரத்து அமைச்சகம் நியமித்த நிபுணர்களின் பரிந்துரைகளை ஏற்று, கஞ்சா உட்கொள்ளும் சாரதிகளின் உடலில் ஒரு மில்லிலிற்றருக்கு 3.5 நானோகிராமுக்கு மேல், THC என்னும் கஞ்சாவின் உட்பொருள் இருக்கக்கூடாது என அரசு முடிவு செய்துள்ளது.
இந்த அளவு, 100 மில்லிலிற்றர் இரத்தத்தில் இருக்கும் 20 மில்லிகிராம் ஆல்கஹாலுக்கு சமம் ஆகும். அதற்கு மேல் இந்த போதைபொருட்கள் இரத்தத்தில் இருந்தால் அபாயம்தான்.
இன்னொரு விதி என்னவென்றால், கஞ்சா உட்கொள்ளும் சாரதிகள் முற்றிலுமாக மதுபானம் அருந்தக்கூடாது என்றும் ஒரு விதி கொண்டுவரப்பட உள்ளது. இந்த இரண்டு போதைப்பொருட்களும் சேர்வதால் ஏற்படும் அபாயத்தை தவிர்க்கவே இந்த விதி கொண்டுவரப்பட உள்ளது.
சாரதிகள் கஞ்சா உட்கொள்ள முழுமையாக தடைவிதிக்கவேண்டும் என எதிர்க்கட்சி ஒன்று கோரிய நிலையில், அந்த பிரேரணையை அரசு நிராகரித்துவிட்டது.