இந்தியாவில் பிரச்சாரத்திற்கு ஜாமீன்! ஆனால் பாகிஸ்தானில் நான் அடக்குமுறைக்கு ஆளாகிறேன் – நீதிமன்றத்தில் இம்ரான் கான் புகார்
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் நீதிமன்றத்தில், அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு பிணை வழங்கியதை உதாரணம் காட்டினார்.
பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமரான இம்ரான் கான் பல்வேறு வழக்குகளினால் தற்போது சிறையில் உள்ளார்.
கடந்த 2021ஆம் ஆண்டில் தனது பதவியை அவர் ராஜினாமா செய்திருந்தார். இந்த நிலையில் உச்ச நீதிமன்றத்தில் இம்ரான் கான் ஆஜரானார்.
அப்போது அவர், ”இந்தியாவில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இந்திய பொதுத்தேர்தலுக்கு முன் பிரச்சாரம் செய்ய பிணை பெற்றார்.
ஆனால், நான் பாகிஸ்தான் சிறையில் அடக்குமுறைக்கு ஆளாக்கப்படுகிறேன். அறிவிக்கப்படாத இராணுவச் சட்டத்தின் கீழ், பொதுத் தேர்தல்களில் இருந்து என்னை விலக்கி வைக்க 5 நாட்களுக்குள் தண்டனை பெற்றேன்” என்று புகார் கூறினார்.