;
Athirady Tamil News

நெருங்கிய நண்பருடைய திருமணத்துக்கு தனியாக வந்த இளவரசர் வில்லியம்: யார் அந்த நண்பர்?

0

பிரித்தானிய இளவரசர் வில்லியமுடைய நெருங்கிய நண்பர் ஒருவருக்கு நேற்று திருமணம். அந்த திருமணம் தொடர்பான சில சுவாரஸ்ய தகவல்கள் வெளியாகியுள்ளன.

யார் அந்த மணமகன்?
ராஜ குடும்பத்தினர் பலர் பங்கேற்கும் அந்த திருமணம், Hugh Grosvenor (33) என்பவருக்கும், அவரது காதலியான Olivia Henson என்பவருக்கும் நடைபெறும் திருமணமாகும்.

Duke of Westminster என்னும் பட்டத்துக்கு சொந்தக்காரரான Grosvenorஇன் ஞானத்தந்தை, மன்னர் சார்லஸ். இந்த Grosvenor, இளவரசர் வில்லியமுடைய மகனான இளவரசர் ஜார்ஜுக்கும், இளவரசர் ஹரியின் மகனான ஆர்ச்சிக்கும் ஞானத்தந்தை ஆவார்.

தனியாக வந்த வில்லியம்

தன் கணவருடைய நண்பரான Grosvenorஉடைய திருமணத்தில் இளவரசி கேட் பங்கேற்கவில்லை. ஆகவே, இளவரசர் வில்லியம் மட்டுமே தனியாக வரும் காட்சிகள் வெளியாகியுள்ளன.

அத்துடன், வில்லியமுடைய சித்தப்பா மகளான இளவரசி யூஜீனியும் திருமணத்தில் பங்கேற்கிறார். Grosvenor, ஹரியின் மகனான ஆர்ச்சிக்கும் ஞானத்தந்தை என்றாலும், ராஜ குடும்பத்தில் நிலவும் சூழல் காரணமாக, இருவரும் பேசி முடித்து, ஹரி Grosvenorஉடைய திருமணத்தில் பங்கேற்பதில்லை என முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த Grosvenor, பிரித்தானியாவின் 40 வயதுக்குக் கீழ் உள்ளவர்களிலேயே பணக்கார நபர் ஆவார். அவரது சொத்து மதிப்பு 10.127 பில்லியன் பவுண்டுகள் ஆகும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.