சட்டுன்னு உடல் எடையை குறைக்க இந்த ஒரே ஒரு கிழங்கு போதும்
உடல் எடை அதிகரிப்பு என்பது தற்போது பெரும்பாலோருக்கு இருக்கும் ஒரு பொதுவான பிரச்சனையாகும்.
உடல் எடை அதிகரிக்க தேவையில்லாத நேரத்தில் அதிகளவு உணவு உண்பது, மன அழுத்தம், அதிகளவு மருந்து மாத்திரைகள் உண்பது போன்ற பல காரணங்கள் உள்ளது.
அந்தவகையில், சட்டுன்னு உடல் எடையை குறைக்க மரவள்ளிக்கிழங்கு ஒன்று போதும்.
மரவள்ளிக்கிழங்கின் நன்மைகள்
மரவள்ளிக் கிழங்கில் இருக்கும் நார்ச்சத்து, நம் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதுடன், குடலில் தேங்கியிருக்கும் நச்சுக்களை வெளியேற்ற உதவுகிறது.
இதன்மூலம் உணவு செரிமான மண்டலத்தை சீராக்கி, குடல் இயக்கத்தை சீர் செய்ய மரவள்ளிக் கிழங்கு பெரிதும் உதவுகிறது.
மரவள்ளிக் கிழங்கில் வைட்டமின் ஏ சத்து நிறைந்திருக்கிறது. மேலும் இதில் இருக்கும் போலேட் மற்றும் வைட்டமின் சி சத்து ஆகியவை உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை வலுவாக்க உதவுகிறது.
இதனால் கண் பார்வை ஆரோக்கியத்தை மேம்படுத்த முடியும். அதே போல பாக்டீரியாக்களை எதிர்த்து போராடும் ஆன்டி ஆக்சிடன்டுகளும் மரவள்ளிக்கிழங்கில் உள்ளது.
மரவள்ளி கிழங்கில் உள்ள நார்ச்சத்து உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை கரைத்து உடல் எடையை குறைக்க உதவுகிறது.
மேலும் ஞாபக சக்தியை அதிகரிக்கும் தன்மைக் கொண்ட மரவள்ளிக் கிழங்கு, ஞாபக மறதியை குறைக்க பெரிதும் உதவுகிறது.
மரவள்ளிக் கிழங்கு தோல் மற்றும் பல்வேறு சரும பிரச்னைகளுக்கும் தீர்வு அளிக்கிறது.
மரவள்ளிக் கிழங்கின் தோலை நீக்கி, அரைத்து முகத்தில் பூசி சிறிது நேரம் கழித்து காய்ந்ததும், முகத்தைக் கழுவினால் சருமப் பிரச்சனைகள் குணமாகும்.
அதேபோல முகத்தில் உள்ள அதிக எண்ணெய் பசையை நீக்கி, சருமத்தின் துளைகளை மூடி மரவள்ளிக் கிழங்கு சருமத்திற்கு புத்துணர்ச்சி கொடுக்க பெரிதும் உதவுகிறது.