அம்பாறையில் போதைப்பொருளுடன் இருவர் கைது
அம்பாறையில் (Ampara) பிரதேசமொன்றில் ஐஸ் போதைப்பொருளை நீண்ட காலமாக பயன்படுத்தி விநியோகத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த இருவரும் நேற்றையதினம் (7) பெரியநீலாவணை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த கைது நடவடிக்கை தொடரபில் மேலும் தெரிய வருகையில், அம்பாறை பெரிய நீலாவணை காவல்துறை பிரிவிற்குட்பட்ட பாண்டிருப்பு தாளவட்டுவான் சந்தி அருகில் நேற்றையதினம் சந்தேகத்திற்கிடமாக இருவர் நடமாடுவதாக கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிற்கமைய அங்கு சென்ற காவல்துறையினர் குறித்த இருவரையும் சோதனை மேற்கொண்டனர்.
மேலதிக விசாரணை
இதன் போது கைது செய்யப்பட்ட 32 மற்றும் 37 வயது மதிக்கத்தக்க குறித்த இரு சந்தேக நபர்களும் அம்பாறை மத்திய முகாம் (Central Camp) பகுதியை சேர்ந்த தனியார் பேருந்து சாரதி மற்றும் நடத்துநர்கள் என அடையாளம் காணப்பட்டதுடன் இவ்விரு சந்தேக நபர்கள் வசம் இருந்து 3300 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்..
மேலும், இரு சந்தேக நபர்களிடம் மேலதிக விசாரணைகளை பெரியநீலாவணை காவல்நிலையப் பொறுப்பதிகாரி காவல்துறை பரிசோதகர் ஜே.எஸ்.கே.வீரசிங்க தலைமையிலான குழு மேற்கொண்டுள்ளதுடன் நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக குறிப்பிப்படுகின்றது.