இஸ்ரேல் படை அதிரடி : பயணக் கைதிகளில் நால்வர் மீட்பு
மத்திய காசாவில் இஸ்ரேல் இராணுவம் நடத்திய சிறப்பு இராணுவ நடவடிக்கையில் ஹமாஸ் வசம் இருந்த பயணக் கைதிகளில் நால்வர் மீட்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
25 வயதான நோவா ஆர்கமணி,(Noa Argamani) அல்மோக் மீர் ஜான்,( 21) (Almog Meir) 27 வயதான Andrey Kozlov,40 வயதான ஷ்லோமி ஜிவ் (Shlomi Ziv) ஆகியோரே மீட்கப்பட்டவர்களாவர்.
பணயக்கைதிகளை மீட்டதில் நாடு “மிகவும் மகிழ்ச்சி
காசா பகுதியில் இருந்து நான்கு பணயக்கைதிகளை மீட்டதில் நாடு “மிகவும் மகிழ்ச்சி” அடைவதாக இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் யோவ் கேலன்ட் குறிப்பிட்டார்.
The heroic operation by the IDF that freed and brought home Noa Argamani, Shlomi Ziv, Andrey Kozlov, and Almog Meir Jan is a heroic triumph.
Now, with the enormous joy all over Israel, the Israeli government must remember its commitment to bring back all 120 hostages still held… pic.twitter.com/bjzaDOy8se
— Bring Them Home Now (@bringhomenow) June 8, 2024
“இஸ்ரேல் படைகள் காசாவில் ஹமாஸால் பிடிக்கப்பட்ட நான்கு பணயக்கைதிகளை மீட்டு இஸ்ரேலுக்கு கொண்டு வர ஒரு சிக்கலான, வீர நடவடிக்கையை நடத்தின. 120 பணயக்கைதிகள் வீட்டிற்கு வரும் வரை நாங்கள் சண்டையிட்டுக் கொண்டே இருப்போம்” என்று அவர் தனது எக்ஸ் பதிவில் தெரிவித்தார்.
நேற்று (08) அதிகாலை மத்திய காசாவின் நுசிராத் பகுதியில் பணயக்கைதிகளை மீட்கும் நடவடிக்கையின் போது பயங்கரவாத எதிர்ப்புப் பிரிவின் அதிகாரி ஒருவர் பலத்த காயம் அடைந்ததாக காவல்துறை அறிவித்துள்ளது. அந்த அதிகாரி சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
இஸ்ரேலியர்கள் மகிழ்ச்சி ஆரவாரம்
இதேவேளை நான்கு இஸ்ரேலிய பணயக்கைதிகளை மீட்கும் நடவடிக்கையில் மத்திய காசாவில் உள்ள நுசிராத் மற்றும் பிற பகுதிகளில் இஸ்ரேலிய தாக்குதல்களில் குறைந்தது 50 பலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாக சுகாதார அதிகாரி ஒருவர் ரொய்ட்டர்ஸிடம் தெரிவித்தார்.
The heroic operation by the IDF that freed and brought home Noa Argamani, Shlomi Ziv, Andrey Kozlov, and Almog Meir Jan is a heroic triumph.
Now, with the enormous joy all over Israel, the Israeli government must remember its commitment to bring back all 120 hostages still held… pic.twitter.com/bjzaDOy8se
— Bring Them Home Now (@bringhomenow) June 8, 2024
டெல் அவிவ் மற்றும் ஏதென்ஸில் உள்ள இஸ்ரேலியர்கள் மத்திய காசா பகுதியில் ஒரு சிறப்பு நடவடிக்கையில் நான்கு பணயக்கைதிகள் மீட்கப்பட்டதைக் கொண்டாடினர். டெல் அவிவ் கடற்கரையில் ஒருவர் ஒலிபெருக்கியில் பணயக் கைதிகள் மீட்பை அறிவித்தார். இதனையடுத்து அங்கிருந்தவர்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர். ஏதென்ஸில், டசின் கணக்கான இஸ்ரேலியர்கள் தெருக்களில் செய்தியைக் கொண்டாடி, “ஆம் இஸ்ரேல் சாய்.” என கோஷமிட்டனர்.
தோல்வியின் அடையாளம், சாதனை அல்ல
மூத்த ஹமாஸ் அதிகாரி சமி அபு ஸுஹ்ரி, காசா பகுதியில் பணயக்கைதிகளை மீட்கும் இஸ்ரேலிய இராணுவ நடவடிக்கைக்கு பதிலளிக்கையில்,”ஒன்பது மாத சண்டையின் பின்னர் நான்கு பணயக் கைதிகளை மீட்டெடுப்பது தோல்வியின் அடையாளம், சாதனை அல்ல” என்று ரொய்ட்டர்ஸிடம் தெரிவித்தார்.
משפחת ארגמני מתאחדת@DaphnaLiel pic.twitter.com/vH7tTOqpGG
— החדשות – N12 (@N12News) June 8, 2024