ஐக்கிய தேசியக் கட்சிக்குள் குழப்பநிலை: வஜிர மீது பகிரங்க குற்றச்சாட்டு
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அரசியல் அலுவலகத்தை ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் வஜிர அபேவர்தன(Vajira Abeywardena)திறந்து வைத்த விடயமானது சர்ச்சையை தோற்றுவித்துள்ளது.
கடந்த 6ஆம் திகதி வஜிர அபேவர்தன அவசர அவசரமாக அலுவலகத்தை திறந்துவைத்தமைக்கு ரவி கருணாநாயக்க உள்ளிட்டோர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்நிலையில் அலுவலக திறப்பு விழாவுக்கு விடுக்கப்பட்ட அழைப்பையும் ரவி கருணாநாயக்க புறக்கணித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் உயர் அதிகாரிகள்
காலி மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் வஜிர அபேவர்தன அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட வேண்டும் என்ற உள்நோக்கத்துடன் இவ்வாறான அலுவலகத்தை திறந்தார் என ஐக்கிய தேசியக் கட்சியின் உயர் அதிகாரிகள் பலரும் கருத்து தெரிவிக்கின்றனர்.
மேலும், சாகல ரத்நாயக்க அடுத்த தேர்தலில் காலி மாவட்டத்தில் போட்டியிட்டு அதிக ஆசனங்கள் உள்ள கொழும்பு மாவட்டத்தில் வேட்புமனுவை பெற்று எப்படியாவது ஆசனம் பெற திட்டமிட்டுள்ளார் என்ற சந்தேகத்தில் எதிர்ப்பு மோதல்கள் உருவாக்கப்பட்டுள்ளன.