குறைந்த வருமானம் பெறுவோருக்கான வீடமைப்பு திட்டம் : வழங்கப்படவுள்ள உதவிதொகை
மேல்மாகாண வீடமைப்பு அபிவிருத்தி நிதியத்தின் கீழ் குறைந்த வருமானம் பெறுவோருக்கு வழங்கப்படும் வீடமைப்பு உதவித் தொகையை மேல்மாகாண ஆளுநர் ரொஷான் குணதிலக்க அதிகரித்துள்ளார்.
இதனடிப்டையில், புதிய வீடு கட்டுவதற்கு இதுவரை வழங்கப்பட்டு வந்த அதிகபட்சம் இரண்டு லட்சம் ரூபாயானது மூன்று லட்ச ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
புதிய விதிகள்
இந்த நிலையில், ஏற்கனவே உள்ள வீட்டை மேம்படுத்தவோ அல்லது மீதமுள்ள பணிகளை முடிக்கவோ இதுவரை வழங்கப்பட்டு வந்த ஒரு லட்சம் ரூபாயும் இரண்டு லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
மேலும், இந்த புதிய விதிகள் இம்மாதம் முதலாம் திகதி முதல் செல்லுபடியாகும் என ஆளுநர் வர்த்தமானி அறிவித்தலையும் அவர் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.