நிறுத்தப்பட்ட சம்பள அதிகரிப்பு! மத்திய வங்கிக்கு உத்தரவிட அரசாங்கத்திற்கு இல்லாத அதிகாரம்
அரசாங்கம் விரும்பியபடி மத்திய வங்கி செயல்படாது. அரசாங்கம் மத்திய வங்கிக்கு பணத்தை அச்சிட உத்தரவிட முடியாது என்று நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய(Ranjith Siyambalapitiya) தெரிவித்துள்ளார்.
பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
மத்திய வங்கி ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
மத்திய வங்கியின் சுதந்திரம் குறித்து நீண்ட காலமாக விவாதிக்கப்பட்டு வருகிறது. இப்போது இந்த சம்பளப் பிரச்சினை ஒரு கோணத்தில் மட்டுமே பார்க்கப்படுகிறது.
மத்திய வங்கியை சுதந்திரமாக மாற்றுவதன் மூலம், அரசாங்கம் விரும்பியபடி மத்திய வங்கி செயல்படாது. உதாரணமாக, அரசாங்கம் மத்திய வங்கிக்கு பணத்தை அச்சிட உத்தரவிட முடியாது.
3 ட்ரில்லியன் கடந்த காலத்தில அச்சிடப்பட்டது. மத்திய வங்கி சுயாதீனமாக இருந்தாலும், மத்திய வங்கி நாடாளுமன்றத்திற்கு பொறுப்புக் கூற வேண்டும். உதாரணமாக, சம்பளப் பிரச்சினை எழுப்பப்பட்ட போது, மத்திய வங்கியின் ஆளுநரும் மற்றவர்களும் நாடாளுமன்றத்திற்கும் நிதிக் குழுவிற்கும் அழைக்கப்பட்டனர்.
மேலும் அந்த சம்பள உயர்வு தற்போது நிறுத்தப்பட்டுள்ளது. மத்திய வங்கி சுதந்திரமாக மாறினாலும் சில விதிமுறைகளுக்கு உட்பட்டுள்ளதை காணமுடிகிறது என குறிப்பிட்டுள்ளார்.