;
Athirady Tamil News

ஜப்பானில் சரியும் பிறப்பு விகிதம்: சொந்த செலவில் டேட்டிங் செயலியை அறிமுகப்படுத்திய அரசு!

0

ஜப்பானில் பிறப்பு விகித வீழ்ச்சியை சரி செய்ய அரசு புதிய முயற்சியாக டேட்டிங் செயலியை அறிமுகம் செய்துள்ளது.

ஜப்பானில் பிறப்பு விகித வீழ்ச்சி
ஜப்பான் ஒரு மக்கள் தொகை நெருக்கடியை எதிர்கொண்டு வருகிறது. நாட்டின் பிறப்பு விகிதம் 1.20 என்ற அடிமட்ட தாழ்வான நிலைக்கு சரிந்துள்ளது, இது நிலையான மக்கள் தொகைக்கு தேவையான 2.1 என்ற விகிதத்தை விட மிகக் குறைவு ஆகும்.

குறைந்து வரும் பிறப்பு விகிதம் எதிர்காலத்தில் ஜப்பானின் தொழிலாளர் சக்தி, பொருளாதாரம் மற்றும் சமூக நலன் ஆகியவற்றை கடுமையாக பாதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஜப்பானுக்கு பிறப்பு வீழ்ச்சி விகிதம் ஒரு கவலை கொண்ட பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. 123.9 மில்லியன் மக்கள் தொகை கொண்ட இந்த நாடு, கடந்த ஆண்டு வெறும் 727,277 பிறப்புகளை மட்டுமே பதிவு செய்தது.

அரசின் டேட்டிங் செயலி!
இந்நிலையில் இந்த புதிய சவால்களை எதிர்கொள்ள, ஜப்பான் ஒரு தனித்துவமான நடவடிக்கையை எடுத்துள்ளது.// அதாவது, அரசாங்கம் தன்னுடைய சொந்த நிதியில் டேட்டிங் செயலி ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.

தற்போது சோதனை கட்டத்தில் இருக்கும் இந்த செயலி, திருமண வாழ்க்கைக்கான முதல் படியாக இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

பயனர்கள் இடையேயான இணக்கத்தை மதிப்பீடு செய்ய செயற்கை நுண்ணறிவு (AI) ஐ அடிப்படையாகக் கொண்ட இணை சேர்க்கும் முறையை இது பயன்படுத்துகிறது.

பங்கேற்பாளர்கள் தங்கள் முன்னுரிமைகள் மற்றும் விருப்பங்களை கண்டறிய “மதிப்பீட்டு சோதனை” ஒன்றை எடுத்துக் கொள்ளலாம், மேலும் ஒரு சாத்தியமான துணையில் விரும்பத்தக்க பண்புகளை குறிப்பிடவும் முடியும்.

மேலும் இந்த செயலி பதவி செய்பவர்கள் நிச்சயமாக சிங்கிளாக(திருமணம் ஆகாதவராக) இருக்க வேண்டும், அவர்களின் வருமான விவரங்களை தெரிவிக்க வேண்டும். மற்றும் திருமணத்திற்கும் தயாராக இருக்க வேண்டும் என்பது போன்ற நிபந்தனைகள் கொண்டுள்ளது.

டேட்டிங் செயலி என்பது ஜப்பான் அரசாங்கத்தின் பன்முக கண்ணோட்டத்தில் ஒரு பகுதி மட்டுமே. விரிவாக்கப்பட்ட குழந்தை பராமரிப்பு வசதிகள், பெற்றோருக்கான வீட்டு வசதி மானியங்கள் மற்றும் குழந்தை பெற தம்பதிகளுக்கு நிதி ஊக்கத்தொகைகள் போன்ற பிற முயற்சிகளும் இதில் அடங்கும்.

ஜப்பானின் இந்த முயற்சி உலகெங்கிலும் அதிக அளவிலான கவனத்தை ஈர்த்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.