திணறப்போகும் வடகொரியா: பதிலடியை அறிவித்தது தென் கொரியா
வட கொரியாவுக்கு (North Korea) எதிராக எல்லையில் ஒலிபெருக்கி பிரசாரம் மீண்டும் தொடங்கப்படும் என்று தென் கொரியா (South Korea) அறிவித்துள்ளது.
தென் கொரிய தேசிய பாதுகாப்பு இயக்குனர் தலைமையில் உயர் அதிகாரிகளின் ஆலோசனை கூட்டம் நேற்று கூடிய போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
வட கொரியா அணு ஆயுதங்களை அடிக்கடி சோதனை நடத்தி வருவதால் கொரிய தீபகற்பத்தில் பதற்றம் நிலவி வருகிறது.
இராட்சத பலூன்கள்
இதனை கண்டிக்கும் வகையில் தென்கொரியாவில் இருந்து வட கொரியாவுக்கு எதிரான பிரசுரங்கள் அடங்கிய பலூன்கள் கடந்த மாதம் வடகொரியாவுக்கு அனுப்பட்டுள்ளது.
இந்த நிலையில், அதற்கு பதிலடியாக வட கொரியா, குப்பைகள், மனித கழிவுகள் அடங்கிய பைகளை ஆயிரக்கணக்கான பலூன்களில் கட்டி தென் கொரியாவுக்கு அனுப்பியது.
இராணுவ தாக்குதல்
இதன்காரணமாக வட கொரியாவுக்கு எதிராக எல்லையில் ஒலி பெருக்கி பிரசாரத்தை மீண்டும் தொடங்குவதற்கு தென் கொரியா முடிவு செய்துள்ளது.
இதேவேளை, இதற்கு எதிரான வட கொரியா நேரடி இராணுவ தாக்குதல் நடத்தக்கூடும் என்பதால் வீரர்களை தயார் நிலையில் வைத்திருக்குமாறு தென் கொரிய இராணுவ கமாண்டர்களுக்கு அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சர் அறிவித்துள்ளார்.