இந்திய பிரதமராக பதவியேற்றார் மோடி: 72 அமைச்சர் பொறுப்பேற்பு!
18-வது நாடாளுமன்ற தேர்தலில் NDA கூட்டணி பெரும்பான்மையை பெற்ற நிலையில், மோடி தலைமையிலான அமைச்சரவை நேற்று பதவியேற்றுள்ளது.
பிரதமரானார் மோடி
நாடாளுமன்ற தேர்தலில் பாஜக தலைமையிலான NDA கூட்டணி 293 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்துள்ளது.
இதையடுத்து இந்திய குடியரசு தலைவர் திரெளபதி முர்மு டெல்லியில் இன்று மாலை நடைபெற்ற பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி மற்றும் அவரது கேபினட்டில் பொறுப்பேற்க உள்ள அமைச்சர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
Narendra Modi – Prime Minister of India for the 3rd time. 🇮🇳 pic.twitter.com/sl5fzEZsxP
— Mufaddal Vohra (@mufaddal_vohra) June 9, 2024
நேற்று மாலை 7:15 மணியளவில் பிரதமர் மோடி 3வது முறையாக இந்திய நாட்டின் பிரதமராக மீண்டும் பொறுப்பேற்று கொண்டார்.
72 அமைச்சர்கள் பொறுப்பேற்பு
பிரதமர் மோடியுடன் சேர்த்து மொத்தம் 72 மத்திய அமைச்சர்கள் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டனர்.
அதில் 27 ஓபிசி பிரிவினர், 10 பட்டியலின மக்கள், 5 பட்டியலின பழங்குடியினருக்கு இடம் வழங்கப்பட்டுள்ளது.
இந்த பதவியேற்பு விழாவில், பியூஷ் கோயல், நிர்மலா சிதாராமன், ராஜ்நாத் சிங், குமாரசாமி, நட்டா, அமித்ஷா ஆகிய முக்கியஸ்தர்கள் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர்.