;
Athirady Tamil News

மொட்டுக் கட்சியின் ஆதரவில் களமிறங்க தயாராகும் சம்பிக்க ரணவக்க

0

ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவர் சம்பிக்க ரணவக்க (Champika Ranawaka) அதிபர் வேட்பாளராக போட்டியிட விரும்புவதாகவும், அதற்கு ஆதரவு வழங்கவேண்டும் எனவும் மகிந்த ராஜபக்சவின்(Mahinda Rajapaksa) பொதுஜன பெரமுனவிடம் கோரியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

எதிர்வரும் அதிபர் தேர்தலில் நடப்பு அதிபர் ரணில் விக்ரமசிங்க(Ranil Wickremesinghe) வேட்பாளராக இருப்பார் என்பதை நாட்டின் அரசியல் தரப்பின் சில பிரிவினர் இதுவரை நம்பவில்லை என கூறப்படுகின்றது.

குறித்த பிரிவில் முன்னாள் அமைச்சரவை அமைச்சரும் தற்போது புதிதாக உருவாக்கப்பட்ட ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவருமான பாட்டலி சம்பிக்க ரணவக்கவும் உள்ளடங்கியுள்ளார்.

இந்த நிலையில், சம்பிக்க ரணவக்க தான் அதிபர் வேட்பாளராக போட்டியிட விரும்புவதாக மகிந்த ராஜபக்சவுடன் தொடர்புகொண்டபோது அவர் சமல் ராஜபக்சவை சந்திக்குமாறு கூறியுள்ளார்.

இதன்படி இடம்பெற்ற சந்திப்பின்போது, ரணில் விக்ரமசிங்கவின் முடிவை தாம் எதிர்பார்த்துக்கொண்டிருப்பதாக சமல் ராஜபக்ச (Chamal Rajapaksa) குறிப்பிட்டுள்ளார்.

இதனையடுத்து, பசில் ராஜபக்ச மற்றும் சம்பிக்க ரணவக்க ஆகியோருக்கு இடையிலான சந்திப்பில், ஏற்கனவே அதிபராக பதவியில் இருந்த ஒருவரே தற்போதைய பிரச்சினையை தீர்க்கக்கூடியராக இருப்பார் எனவும், எனவே அவ்வாறான ஒருவரையே தமது கட்சி அதிபர் வேட்பாளராக ஏற்றுக்கொள்ளும் என பசில் ராஜபக்ச (Basil Rajapaksa) குறிப்பிட்டுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.