;
Athirady Tamil News

சிட்னியிலுள்ள அமெரிக்க தூதரகத்தின் மீது தாக்குதல்: அவுஸ்திரேலிய பிரதமர் கடும் கண்டனம்

0

அவுஸ்திரேலியா(Australia) சிட்னியில் உள்ள அமெரிக்க தூதரகம் சுத்தியலால் சேதப்படுத்தியமைக்காக அவுஸ்திரேலிய பிரதமர் தனது கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

மேலும், ஆர்ப்பாட்டக்காரர்கள் தங்கள் சீற்றத்தை குறைத்துக்கொள்ளவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அவுஸ்திரேலியா சிட்னியில்(Sydney) உள்ள நேற்றையதினம்(9)அமெரிக்க தூதரகத்தின் மீது தாக்கதல் நடத்தப்பட்டது, ஒன்பது ஜன்னல்கள் உடைக்கப்பட்டு, ஹமாஸ் சார்பான படங்கள் கதவில் பொறிக்கப்பட்டுள்ளன.

அமெரிக்க தூதரகம்
இது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள அவர், ‘‘மத்திய கிழக்கு என்பது மிகவும் சிக்கலான விவகாரம், இது சிக்கலான விடயம் இதற்கு சில நுணுக்கங்கள் அவசியம் இது வெறுமனே கோசமிடும் விடயமல்ல.

அமெரிக்க தூதரகத்திற்கு வர்ணம் தீட்டுவது போன்ற நடவடிக்கைகள் சொத்துக்களை சேதப்படுத்தும் குற்றம் என்பதற்கு அப்பால் செய்தவர்களின் நோக்கத்தை நிறைவேற்ற உதவப்போவதில்லை என்றார்.

இதேவேளை, முகத்தை மறைத்த உருவமொன்று துணைதூதரகத்தின் ஜன்னல்களை சேதப்படுத்துவது பாதுகாப்பு கமராக்களில் பதிவாகியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மேலும், தூதரகத்தின் மீது இரண்டு சிவப்பு தலைகீழ் முக்கோணங்களை வரைந்து சென்றுள்ளனர் இவை பலஸ்தீனியர்களின் எதிர்ப்பை வெளியிடுவதற்காக உள்ளதாகவும் காவல்துறையினர் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.