வேலையின்மை… உலகின் பணக்கார நாடுகள் பட்டியலில் மிக வேகமாக பிரித்தானியாவில் அதிகரிப்பு
உலகின் 38 பணக்கார நாடுகளில் வேலையின்மை பிரித்தானியாவில் வேகமாக அதிகரித்து வருவதாக ஆய்வுகளில் தெரியவருகிறது.
வேலை இழந்தவர்களின் எண்ணிக்கை
சமீபத்தில் வெளியான வேலையின்மை தொடர்பான தரவுகளும், பிரித்தானியாவின் தற்போதைய நிலையை விளக்குவதாக குறிப்பிட்டுள்ளனர்.
OECD என அறியப்படும் இந்த 38 பணக்கார நாடுகளில், பிரித்தானியா போன்று கோஸ்டாரிகாவில் மட்டுமே ஜனவரி தொடக்கத்தில் இருந்து மார்ச் இறுதிக்குள் வேலை இழந்தவர்களின் எண்ணிக்கையில் இதேபோன்ற அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
பிரித்தானியாவை பொறுத்தமட்டில் ஒவ்வொரு பிராந்தியமும் அதிகரித்த வேலையின்மை குறைந்த எண்ணிக்கையிலான வேலை காலியிடங்களாலும் பாதிக்கப்பட்டுள்ளது.
மேலும், பொருளாதாரம் வலுவாக வளர்ந்து வருகிறது என்ற ரிஷி சுனக்கின் கருத்துக்கு நேரெதிராக சமீபத்திய மாதங்களில் வேலையின்மை அதிகரித்துள்ளது. ஆனால் கடந்த ஆண்டு காணப்பட்ட மந்த நிலையில் இருந்து பொருளாதாரம் மீண்டுள்ளதுடன், இந்த ஆண்டின் முதல் காலாண்டில் 0.6 சதவிகிதம் வளர்ச்சியும் பதிவு செய்துள்ளது.
மந்த நிலையில் இருந்து மீண்டு வந்த போதிலும், தொழிலாளர்களின் எண்ணிக்கையை குறைக்க முயல்வதாக முதலாளிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். சமீபத்திய ஆய்வு ஒன்றில் பிரித்தானியாவில் உள்ள 35 சதவீத நிறுவனங்கள் அடுத்த 6 மாதங்களுக்கு புதிதாக ஆட்சேர்ப்பு நடவடிக்கைகளை குறைக்க(14%) அல்லது ஒத்திவைக்க(21%) முடிவு செய்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அதிகரிக்கும் செலவுகள்
இந்த நடவடிக்கைகளுக்கு முதன்மை காரணமாக கூறப்படுவது மோசமான வருவாய் அல்லது அதிகரிக்கும் செலவுகள் என ஐந்தில் மூன்று மேலாளர்கள் பதிலளித்துள்ளனர்.
ஊழியர்களின் அதிக சம்பளம் எண்ணிக்கையை குறைக்க ஒரு காரணம் என ஐந்தில் ஒருவர் குறிப்பிட்டுள்ளனர். இதனிடையே பொதுத்துறை நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களின் எண்ணிக்கையைக் குறைக்கத் திட்டமிட்டுள்ளதாகக் கூற அதிக வாய்ப்புள்ளது என்றே கூறப்படுகிறது.
இந்த நிலையில் அமெரிக்கா, பிரான்ஸ், ஜேர்மனி, அவுஸ்திரேலியா மற்றும் ஜப்பான் உள்ளிட்ட இதன் உறுப்பு நாடுகள் தங்கள் அரசியல்வாதிகளை ஊழியர்கள் பற்றாக்குறைக்கு காரணம் என்ன என்பதை கண்டறிய அறிவுறுத்தியுள்ளது.