;
Athirady Tamil News

ஹமாஸ் பிடியில் பிணைக்கைதியாக இருந்த பெண் ஒருவர் தப்பிக்கும் பரபரப்பு காட்சிகள்

0

ஹமாஸ் பிடியில் பிணைக்கைதியாக பிடித்துவைக்கப்பட்டிருந்த இஸ்ரேல் பெண்ணொருவரை அந்நாட்டு வீரர்கள் மீட்கும் காட்சி ஒன்று வெளியாகியுள்ளது.

கடத்தப்பட்ட இளம்பெண்

2023ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 7ஆம் திகதி, இஸ்ரேல் மீது திடீர்த்தாக்குதல் நடத்திய ஹமாஸ் ஆயுதக்குழுவினர், சுமார் 250 இஸ்ரேலியர்களை பிணைக்கைதிகளாக பிடித்துச் சென்றனர்.

அப்போது வெளியான வீடியோக்களில், நோவா ( Noa Argamani, 26) என்னும் இளம்பெண் ஹமாஸ் குழுவினரால் மோட்டார் சைக்கிளில் கடத்திச் செல்லப்படும் வீடியோ பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. நோவா என்னும் அந்த இஸ்ரேலிய இளம்பெண், என்னைக் கொன்றுவிடாதீர்கள் என கதறிய காட்சி, கடும் அதிர்ச்சியை உருவாக்கியிருந்த நிலையில், அதற்குப் பிறகு அவர் என்ன ஆனார் என்பது யாருக்கும் தெரியாமலே இருந்தது.

மீட்ட இஸ்ரேல் வீரர்கள்

இந்நிலையில், நோவா உட்பட நான்கு பேரை, வார இறுதியில் இஸ்ரேல் வீரர்கள் மீட்டார்கள். அவர்களில் இளம்பெண் நோவாவை அவர்கள் மீட்பதைக் காட்டும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

எட்டு மாதங்களுக்குப்பின் மீட்கப்பட்ட நோவாவை அவரது தந்தை கட்டியணைத்து முத்தமிட்டுக் கதறுவதைக் காட்டும் காட்சிகளும் வெளியாகி வேகமாக பகிரப்பட்டுவருகின்றன.

நோவாவின் தாய் மூளை புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, நோய் முற்றி, நோயுடன் போராடிவரும் நேரத்தில், தன் உயிர் பிரிவதற்கு முன் தன் மகளை பார்த்துவிடவேண்டும் என கண்ணீர் கோரிக்கை விடுத்திருந்தார். இந்நிலையில் நோவா மீட்கப்பட்டுள்ள விடயம் அவரது குடும்பத்துக்கு பெருமகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தன் நாட்டு ஜனாதிபதி உட்பட தன்னை மீட்டவர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொண்டுள்ளார் நோவா.

 

You might also like

Leave A Reply

Your email address will not be published.