சார்ள்ஸ் மன்னரின் கலை படைப்பு ஏலத்தில் விற்பனை
கனடாவில் காணப்பட்ட, பிரித்தானியாவின் மன்னர் மூன்றாம் சார்ள்ஸின் கலை படைப்பு ஒன்று பிரித்தானியாவில் ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
பிரிட்டிஸ் கொலம்பியாவைச் சேர்ந்த 55 வயதான ரேமன் பட்டன் என்ற நபர் இந்த கலை படைப்பினை ஏலத்தில் விற்பனை செய்துள்ளார்.
மட்பாண்ட உற்பத்திகளுக்கு பயன்படுத்தப்படும் செரமிக்கினால் செய்யப்பட்ட அழகிய சிறிய ஆடு ஒன்றின் சிற்பம் இவ்வாறு விற்பனை செய்யப்பட்டுள்ளது.
தனது 21 ஆம் பிறந்தநாளுக்கு பரிசாக இது கிடைக்கப்பெற்றது என குறித்த நபர் தெரிவித்துள்ளார். இந்த மண்பாண்ட சிற்பம் சுமார் 20,000 டாலர்களுக்கு ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
அமெரிக்காவை சேர்ந்த ஒருவர் இதனை கொள்வனவு செய்தார் என தெரிவிக்கப்படுகிறது.பிரித்தானிய மன்னரினால் உருவாக்கப்பட்டதாக அறியப்பட்ட ஒரே சிற்பம் இதுவென தெரிவிக்கப்படுகிறது.
பிரித்தானிய மன்னார் சிறந்த ஓவியர் என்ற போதிலும் சிற்பக் கலைகளில் அவருக்கு இருந்த ஆற்றலை வெளிப்படுத்தும் விதமாக இந்த சிற்பம் காணப்படுகின்றது.
1969 ஆம் ஆண்டு இந்த சிற்பம் தமக்கு வழங்கப்பட்டதாக அதன் உரிமையாளர் குறிப்பிடுகின்றார்.
பிரித்தானியாவின் கேம்பிரிட்ஜ் கல்லூரியில் பணியாற்றிய காலத்தில் தமது உறவினருக்கு இந்த சிற்பம் கிடைக்கப் பெற்றதாகத் தெரிவிக்கப்படுகின்றது.