;
Athirady Tamil News

யாழில் சட்டவிரோத கொல்களம் முற்றுகை – மாடுகள் மீட்பு

0

யாழ்ப்பாணம் – பருத்தித்துறை, துன்னாலைப் பகுதியில் நீண்ட காலமாக இயங்கி வந்த சட்டவிரோத கொல்களத்தை முற்றுகையிட்ட சாவகச்சேரிப் பொலிஸார் இறைச்சியாக்கப்படவிருந்த கன்றுத்தாச்சி மாடு உட்பட மூன்று பசு மாடுகளை இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை உயிருடன் மீட்டுள்ளனர்.

அதேவேளை மாடுகளை கடத்த பயன்படுத்தப்பட்ட வாகனத்தையும் மீட்டுள்ளதுடன் , நபர் ஒருவரையும் கைது செய்துள்ளனர்.

சாவகச்சேரிப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மட்டுவில் பிரதேசத்தில் அண்மையில் வளர்ப்பு மாடுகள் திருடப்பட்டதாக பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் நீண்ட தேடுதலுக்கு பின்னர் பொலிஸார் குறித்த சட்டவிரோத கொல்களத்தை கண்டுபிடித்துள்ளனர்.

இதன்போது சாவகச்சேரி- மட்டுவில் கிராமத்தில் திருடப்பட்ட ஒரு மாட்டினை பொலிஸார் மீட்டதுடன்-ஏனைய இரண்டு மாடுகள் அடையாளம் காணப்படாத நிலையில் சாவகச்சேரிப் பொலிஸ் நிலையத்தில் வைத்து பராமரிக்கப்பட்டு வருகின்றது.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துளள்னர்

You might also like

Leave A Reply

Your email address will not be published.