;
Athirady Tamil News

தேர்தலில் போட்டியிடாமல் அமைச்சரான நிர்மலா: ஜெய்சங்கருக்கு கிடைத்த பதவி

0

இந்தியாவில் நரேந்திர மோடியின் (Narendra Modi) அரசாங்கத்தின் அமைச்சரவையில் முக்கிய பொறுப்புக்களில் இருந்து தவிர்க்கப்படுவார் என்று கூறப்பட்டு வந்த நிர்மலா சீத்தாராமன் மீண்டும் நிதியமைச்சராக நியமனம் பெற்றுள்ளார்.

நிர்மலா சீதாராமனின் (Nirmala Sitharaman) ஜிஎஸ்டி கொள்கைகளே பாரதிய ஜனதாக்கட்சியின் (Bharatiya Janata Party) பின்னடைவுக்கான முக்கிய காரணமாக அமைந்திருந்தது.

எனினும் குற்றச்சாட்டுக்களை எல்லாம் மீறி அவர் தேர்தலை சந்திக்காமலேயே அவர்அமைச்சராகி இருக்கிறார்.

புதிய அமைச்சரவை
புதிய அமைச்சரவையில் ராஜ் நாத் சிங் (Rajnath Singh) பாதுகாப்பு அமைச்சராகவும், அமித் சா உள்துறை அமைச்சராகவும், சுப்பிரமணியன் ஜெய்சங்கர் (S. Jaishankar) வெளியுறவு அமைச்சராகவும் மீண்டும் பொறுப்பேற்றுள்ளனர்.

நிதின் ஜெய்ராம் கட்கரி சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சராக மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.

அதேநேரம் தமிழ் நாட்டில் மக்களவை தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்த எல் முருகன் தகவல் தொடர்பு மற்றும் நாடாளுமன்ற விவகார இணை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அமைச்சரவையில் 31 அமைச்சர்களின் பதவிகள் மற்றும் 41பேர் இணை அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.