தனியார் வங்கி ஒன்றில் திடீர் தீப்பரவல்
மொரகஹஹேன தனியார் வங்கி ஒன்றில் சற்றுமுன்னர் தீ பரவியுள்ளதாக கூறப்படுகின்றது.
ஹொரணை மாநகர சபையின் தீயணைப்பு திணைக்கள அதிகாரிகள் தற்போது தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்நிலையில் தீ ஏற்பட்டமைக்கான காரணம் வெளியாகவில்லை.