காசா இனப்படுகொலை விவகாரம்: பைடனுக்கு எதிராக அமெரிக்காவில் வழக்கு தாக்கல்
அமெரிக்காவில் (United States) உள்ள சிவில் உரிமைகள் குழுவான அரசியலமைப்பு உரிமைகளுக்கான மையமானது, அந்நாட்டு அதிபர் ஜோ பைடன் (Joe Biden) மீது வழக்குத்தாக்கல் செய்துள்ளது.
காசாவில் (Gaza) இடம்பெற்ற இஸ்ரேலிய இனப்படுகொலைக்கு அமெரிக்க அதிபர் வெளியுறவுத்துறை செயலாளர் மற்றும் பாதுகாப்பு செயலாளர் உட்பட அமெரிக்க அரசு உடந்தையாக இருப்பதாக குறித்த வழக்கில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் உள்ள பலஸ்தீனிய மனித உரிமைகள் அமைப்புக்களான அல்-ஹக் மற்றும் டிஃபென்ஸ் ஃபார் சில்ட்ரன் இன்டர்நேஷனல் (அமெரிக்காவில் உள்ள பலஸ்தீனிய அமைப்பு) ஆகியவை இந்த முறைப்பாட்டினை பதிவு செய்துள்ளன.
மாவட்ட நீதிமன்றம்
இந்த முறைப்பாடானது அமெரிக்காவின் சன் பிரான்சிஸ்கோவில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
போரில் ஐந்து குடும்ப உறுப்பினர்களை இழந்த வழக்கின் வாதியான லைலா எல்-ஹடாத் என்ற நபர் “காசாவில் எஞ்சியிருக்கும் எனது குடும்ப உறுப்பினர்களுக்கு அவர்கள் சார்பாக வாதிடுவதற்கு என்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன். இதை நான் உறுதியளிக்கின்றேன்,” என கூறியுள்ளார்.