இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் மாத சம்பளம் தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்
மக்களவை தேர்தலில் பெருவாரியான இடங்களை கைப்பற்றிய பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றிப்பெற்றதையடுத்து மூன்றாவது முறைய நரேந்திர மோடி இந்திய பிரதமராக பதவியேற்றுள்ளார்.
அந்தவகையில் இந்தியாவில் குடியரசு தலைவருக்கும் பிரதமருக்கும் வழங்கப்படும் மாத சம்பளம் எவ்வளவு என பார்க்கலாம்.
2018 ஆம் ஆண்டில் முப்படைகளின் உச்ச தளபதியான இந்திய குடியரசு தலைவரின் சம்பளம் மாதம் ரூ. 1.50 லட்சத்தில் இருந்து ரூ. 5 லட்சம் வரையில் இருந்தது.
நரேந்திர மோடி
குடியரசுத் தலைவர்கள் நாட்டில் எங்கு வேண்டுமென்றாலும் விமானம் மற்றும் தொடருந்தில் இலவசமாக செல்லலாம். அவர்கள் வேறு ஒரு நபரையும் அழைத்து செல்லலாம்.
மேலும், குடியரசு தலைவருக்கு மருத்துவ சேவைகள் இலவசம். வாடகை அற்ற வீடு, 2 இலவச இணைய இணைப்பு, 1 தொலைபேசி, ஐந்து தனிப்பட்ட ஊழியர்களும் வழங்கப்படுவார்கள்.
பதவியில் இருக்கும் குடியரசு தலைவர் ஒருவர் இறந்தால், அவருடைய ஓய்வூதியத்தில் இருந்து 50 சதவீதம் மனைவிக்கு வழங்கப்படும்.
மாத சம்பளம்
அவருடைய மனைவிக்கும் மருத்துவ சேவைகள் அனைத்தும் இலவசம். 2018 ஆம் ஆண்டில் இருந்து ரூ. 1.25 லட்சமாக இருந்த மாத ஊதியம் ரூ. 4 லட்சமாக அதிகரிக்கப்பட்டது.
இலவச தங்குமிடம், தனிப்பட்ட பாதுகாப்பு, மருத்துவம், தொடருந்து மற்றும் விமானப் பயணம், தொலைப் பேசி சேவை போன்றவை வழங்கப்படும்.
இந்தியப் பிரதமருக்கு மாதம் ரூ.1.66 லட்சம் சம்பளமாக வழங்கப்படுவதாக கூறப்படுகிறது. இவருக்கு தனிப்பட்ட பணியாளர் சிறப்பு பாதுகாப்பு குழு, பிரத்யேக விமானம், ரேஸ் கோர்ஸ் சாலையில் அதிகாரப்பூர்வ இல்லத்தில் பிரதமர் தங்கிக் கொள்ளலாம்.
இதையும் தவிர அவருக்கு இலவச பயணங்கள், பணியாளர்கள், மருத்துவ வசதிகள் போன்றவையும் வழங்கப்படுகின்றது.