இரண்டாம் கட்ட அணு ஆயுத போர்ப்பயிற்சியை அறிவித்தது ரஷ்யா: உடன் இணைந்த மற்றொரு நாடு
ரஷ்யா, இரண்டாம் கட்ட அணு ஆயுத போர்ப்பயிற்சியைத் துவங்க இருப்பதாக அறிவித்துள்ளது.
உடன் இணையும் மற்றொரு நாடு
ரஷ்யா, இரண்டாம் கட்ட அணு ஆயுத போர்ப்பயிற்சியைத் துவங்க இருப்பதாக, நேற்று, அதாவது, ஜூன் மாதம் 11ஆம் திகதி செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ள நிலையில், இம்முறை ரஷ்யாவுடன் அதன் முக்கிய கூட்டாளியான பெலாரஸும் இணைந்துகொள்ள உள்ளது.
விடயம் என்னவென்றால், இம்முறை, போர்க்களத்தில் பயன்படுத்தப்படும் சிறியவகை அணு ஆயுதங்களைக் கொண்டு அணு ஆயுத போர்ப்பயிற்சி மேற்கொள்ள இருப்பதாக ரஷ்யா அறிவித்துள்ளது.
பிரான்ஸ் முதலான நாடுகள் உக்ரைனுக்கு போர் வீரர்களை அனுப்புவது முதலான உதவிகளை செய்ய இருப்பது குறித்து செய்திகள் வெளியாகியிருந்த விடயம் ரஷ்யாவை எரிச்சலூட்டியிருந்த நிலையில், ஐரோப்பிய தேர்தல்களில் பிரான்ஸ் ஜனாதிபதியின் கட்சியும், ஜேர்மன் சேன்ஸலர்ன் கட்சியும் பின்னடைவைச் சந்தித்துள்ளதைத் தொடர்ந்து ரஷ்யாவின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.