15,000 கொசுக்களின் விருந்து! கொசு மனிதனின் வித்தியாசமான ஆராய்ச்சி
கொசுக்களுக்கு இரத்தம் கொடுக்கும் உயிரியலாளர் ஒருவரின் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
வினோத ஆராய்ச்சியில் ஈடுபடும் உயிரியலாளர்
வினோத ஆராய்ச்சியில் ஈடுபடும் பெர்ரான் ரோஸ் என்ற உயிரியலாளர், கொசுக்களை பற்றிய ஆராய்ச்சிக்காக தன்னுடைய ரத்தத்தை கொசுக்களுக்கு ஊட்டுவதாக கூறுகிறார்.
அந்த வீடியோவில், பெர்ரான் ரோஸ் தனது கையில் மெல்லிய கையுறையை அணிந்து கொண்டு, கொசுக்கள் நிரம்பிய கண்ணாடி பெட்டிக்குள் கையை விடுகிறார்.
கொசுக்கள் அவரது கையில் அமர்ந்து ரத்தத்தை உறிஞ்ச தொடங்குகின்றன. சற்று நேரம் கழித்து, தனது கையை வெளியே எடுக்கும் போது, அவரது கையில் ஏராளமான கொசுக்கடி தடங்கள் நிரம்பியுள்ளன.
கொசு மனிதன்
வீடியோவில், கொசு மனிதன் என்று அழைக்கப்படும் டாக்டர் பெர்ரான் ரோஸ் இந்த விபரீத ஆராய்ச்சியை ஏன் செய்கிறார் என்பதையும் விளக்குகிறார்.
கொசுவின் குணாதிசயங்கள் மற்றும் அவற்றின் ஆயுட்காலம் பற்றிய ஆராய்ச்சியை மேற்கொண்டு வருகிறாராம்.
இதற்காக தினமும் கொசுக்கள் நிரம்பிய பெட்டிக்குள் தனது கையை வைத்து பத்து வினாடிகள் கடிக்க வைக்கிறாராம். இதுவரை 15,000 கொசுக்கள் அவரைக் கடித்தது உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்ட வீடியோவை 4 லட்சத்திற்கும் அதிகமானவர்களால் பார்க்கப்பட்டுள்ளது.
View this post on Instagram