இஸ்ரேல் குறிவைத்து பாய்ந்த 150 ராக்கெட்டுகள்! IDF வெளியிட்ட முக்கிய தகவல்
லெபனானில் இருந்து வடக்கு இஸ்ரேல் மீது இன்று ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
150 ராக்கெட்டுகள்
இஸ்ரேல்-ஹமாஸ் இடையே தீவிரமான சண்டை தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், இன்று லெபனானில் இருந்து வடக்கு இஸ்ரேலை குறிவைத்து கிட்டத்தட்ட 150 ஏவுகணைகள் வீசப்பட்டுள்ளன.
நேற்று காலை முதலாவதாக 90 ராக்கெட்டுகள் வீசப்பட்ட நிலையில், நகரம் முழுவதும் அபாய சைரன் ஒலிக்கப்பட்டது.
இந்த தாக்குதலை தொடர்ந்து இரண்டாவது முறையாக சுமார் 70 ராக்கெட்டுகள் இஸ்ரேலை குறிவைத்து ஏவுப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக நகரம் முழுவதும் அபாய சைரன்கள் இன்னும் தொடர்ந்து ஒலித்துக் கொண்டு இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
உயிரிழப்புகள் இல்லை
இஸ்ரேல் பாதுகாப்பு படைகளின் கூற்றுப்படி, இந்த ராக்கெட் தாக்குதலில் உயிரிழப்புகள் மற்றும் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை தெரியவந்துள்ளது.
IDF இன் தகவல்படி, இதுவரை மட்டும் 150 ராக்கெட்டுகள் ஏவப்பட்டுள்ளன, இன்னும் அடுத்தடுத்து ஏவுகணைகள் ஏவப்படலாம் என்ற அச்சம் நிலவுவதால் தடுப்பு நடவடிக்கைகள் அனைத்தும் தயார் நிலையில் வைக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.