;
Athirady Tamil News

ஓன்லைனில் மருத்துவரை தேடிய நடிகருக்கு ரூ.10 அனுப்ப சொல்லி வந்த Link! கடைசியில் ரூ.77,000 இழப்பு

0

மும்பையில் ஓன்லைனில் மருத்துவரை தேடிய நடிகர் ஒருவர் ரூ.77,000 இழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ரூ.77,000 இழப்பு
மும்பையை சேர்ந்த பாலிவுட் நடிகர் மொகமத் இக்பால். இவர் தான் இருக்கும் தாதர் பகுதியில் எலும்பு சிகிச்சை மருத்துவரை பார்க்க வேண்டும் என்று விரும்பியுள்ளார்.

இதற்காக, ஒன்லைனில் மருத்துவரை தேடிய இக்பாலுக்கு மொபைல் எண் கிடைத்துள்ளது. அந்த எண்ணிற்கு அழைத்து கேட்ட போது மருத்துவரை பார்க்கவேண்டுமானால் அதற்கு முன்பதிவு செய்து கொள்ளவேண்டும் என்று கூறியுள்ளனர்.

பின்னர், முன்பதிவு செய்வதற்கு ரூ.10 அனுப்ப வேண்டும் என்று இரண்டு லிங்குகளை அனுப்பி வைத்துள்ளனர்.

ஆனால், அவரால் பணத்தை அனுப்ப முடியவில்லை. பின்னர், எதோ பிரச்சனை இருப்பதை அறிந்த இக்பால் தனது வங்கி மேலாளரிடம் தகவல் தெரிவித்தார்.

இதையடுத்து, 4 நாட்கள் கழித்து இக்பால் நம்பருக்கு அடுத்தடுத்து மெசேஜ் வந்துள்ளது. அவரது வங்கிக்கணக்கில் இருந்து ரூ.77,000 எடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

உடனே, சைபர் பிரிவு நம்பருக்கு போன் செய்து தகவல் கொடுத்துவிட்டு புகார் கொடுத்தார். இது தொடர்பாக சைபர் பிரிவு பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.