;
Athirady Tamil News

உக்ரைன் அதிபரின் சொந்த ஊரை இலக்கு வைத்த ரஷ்யா : பலர் பலி

0

உக்ரைன்(ukraine) அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி(volodymyr zelensky)யின் சொந்த ஊரான கிரிவி ரிஹ் நகரின் மீது ரஷ்யா(russia) ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது.

சாதாரண மக்கள் தங்கியிருந்த கட்டிடத்தின் மீது இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தன்னார்வலர்கள் தற்போது இடிபாடுகளை அகற்றி
இந்த தாக்குதலில் 9 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 29 பேர் காயமடைந்தனர்.உக்ரைனின் சட்ட மா அதிபர் அலுவலகம் வெளியிட்ட தகவலில் புதன்கிழமை குடியிருப்பு கட்டிடம் தாக்கப்பட்டதில் காயமடைந்தவர்களில் ஐந்து குழந்தைகளும் உள்ளதாகக் கூறுகிறது.

அவசரகால சேவைகள், காவல்துறை மற்றும் தன்னார்வலர்கள் தற்போது இடிபாடுகளை அகற்றி வருகின்றனர். சம்பவ இடத்திற்கு தேடுதல் நாய்கள் வரவழைக்கப்பட்டன.

உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கியின் சொந்த ஊரில் நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் பகிரங்கமாக கருத்து தெரிவிக்கவில்லை.

உக்ரைன் அதிபர் இரங்கல்
இதேவேளை, தாக்குதல்களில் உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கு உக்ரைன் அதிபர் இரங்கல் தெரிவித்துள்ளார்.

“ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மணி நேரமும், ரஷ்ய பயங்கரவாதம் உக்ரைன் – அதன் பங்காளிகளுடன் சேர்ந்து – [நாட்டின்] வான் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என்பதை நிரூபிக்கிறது,” என்று அவர் கூறினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.