G7 உச்சி மாநாடு துவங்கியதுமே ரஷ்யாவுக்கெதிராக எடுக்கப்பட்டுள்ள சர்ச்சைக்குரிய முடிவு
G7 உச்சி மாநாடு துவங்கியதுமே, ரஷ்யாவுக்கெதிராக சர்ச்சைக்குரிய முடிவு ஒன்றை எடுக்க அனைத்து உறுப்பு நாடுகளும் ஏகமனதாக சம்மதம் தெரிவித்துள்ளன.
ரஷ்யாவுக்கெதிராக எடுக்கப்பட்டுள்ள சர்ச்சைக்குரிய முடிவு
கனடா, பிரான்ஸ், ஜேர்மனி, இத்தாலி, ஜப்பான், பிரித்தானியா மற்றும் அமெரிக்கா ஆகிய ஏழு நாடுகள் அடங்கிய G7 அமைப்பின் உச்சி மாநாடு இத்தாலியில் நடைபெறுகிறது.
மாநாடு துவங்கியதுமே, ரஷ்யாவுக்கெதிராக, உக்ரைனுக்கு ஆதரவாக, அமெரிக்கா திட்டம் ஒன்றை முன்வைக்க, அந்த திட்டத்தை அனைத்து உறுப்பு நாடுகளும் ஏற்றுக்கொண்டுள்ளன.
அது என்ன திட்டமென்றால், 260 பில்லியன் டொலர்கள் மதிப்புடைய, ரஷ்யாவின் முடக்கப்பட்டுள்ள சொத்துக்களிலிருந்து கிடைக்கும் பணத்தை உக்ரைனுக்கு உதவுவதற்காக பயன்படுத்துவதும், அந்த சொத்துக்களிலிருந்து கிடைக்கும் லாபத்திலிருந்து 50 பில்லியன் டொலரை உக்ரைனுக்கு கடனாக கொடுப்பதும் ஆகும்.
சிக்கல் என்னவென்றால், நாளை ரஷ்ய உக்ரைன் போர் முடிந்துவிட்டால், ரஷ்யாவுக்கு சொந்தமான சொத்துக்கள் விடுவிக்கப்பட்டுவிடும். அப்போது, உக்ரைனுக்கு கொடுக்கப்பட்ட கடனை அடைக்க, மற்ற நாடுகள் செலவு செய்யும் நிலை ஏற்படலாம் என்பதால், இந்த திட்டத்தை நிறைவேற்றுவதில் சிக்கல் உள்ளதை மறுப்பதற்கில்லை.