இளவரசர் வில்லியமின் “ஹாரி பாட்டர்” வடு! குழந்தைப் பருவ விபத்து ரகசியம்
இளவரசர் வில்லியம் தனது இளமை பருவத்தில் ஏற்பட்ட வடுவை பற்றி விளக்கும் போது அதனை “ஹரி பாட்டர்” வடு என்று அழைத்தார்.
இளவரசர் வில்லியமின் “ஹாரி பாட்டர்” வடு
கார்டிஃப் மெட்ரோபொலிட்டன் பல்கலைக்கழகத்திற்கு(Cardiff Metropolitan University) விஜயம் செய்த இளவரசர் வில்லியம், கடல்பாசி புதுமை பற்றி பேசும் போது தனது குழந்தை பருவ வடுவை குறித்து வெளிப்படுத்தினார்.
குறும்பாக அதை “ஹாரி பாட்டர் வடு” என்று வில்லியம் அழைத்தார். ஏனென்றால், இளம் வயதில் விளையாடும் போது தவறுதலாக கோல்ப் மைதானத்தில் தலையில் அடிபட்ட போது இந்த வடு ஏற்பட்டதாக தெரிவித்தார்.
இந்த வடு அவரை மீண்டும் கோல்ப் விளையாட விருப்பமற்றவராக ஆக்கியது என்றும் தெரிவித்தார்.
பழைய நினைவுகளுக்கு திரும்பிய வில்லியம்
கடல்பாசியால் செய்யப்பட்ட மக்கும் தன்மை கொண்ட கோல்ப் ஈட்டி ஒன்றைக் காண்பித்த போது இது நடந்தது.
அவர் தனது வடுவை சுட்டிக்காட்டி 1991 இல் பள்ளியில் படிக்கும் போது நடந்த விபத்தை விளக்கினார்.
Celebrating seaweed innovation with @EarthshotPrize in Cardiff!
Great to see Earthshot Finalists @notpla and Sea Forest Australia getting involved, and many more businesses pioneering seaweed use in food sustainability, product development and biomedical sciences! 🌍💚 pic.twitter.com/dKtlu6year
— The Prince and Princess of Wales (@KensingtonRoyal) June 11, 2024
இந்த விபத்துக்கு பிறகு மருத்துவ கவனிப்பு தேவைப்பட்டதுடன் நிரந்தர வடுவை ஏற்படுத்தியதாகவும் தெரிவித்தார்.