குவைத் தீ விபத்து: பேராவூரணி இளைஞரின் நிலை தெரியாததால் குடும்பத்தினர் சோகம்
குவைத் தீ விபத்தில் சிக்கிய பேராவூரணியைச் சேர்ந்த இளைஞரின் நிலை இன்னும் தெரியவில்லை.
குவைத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீவிபத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஐந்து பேர் உட்பட 49 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே, இந்த விபத்து நடந்த அதே குடியிருப்பில் தங்கியிருந்த, தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியைச் சேர்ந்த இளைஞரின் நிலை குறித்த எந்த தகவலும் தெரியாததால் அவரது குடும்பத்தினர் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
பேராவூரணி அருகே ஆதனூர் (Aadnur) பகுதியை சேர்ந்தவர் 28 வயதான புனாஃப் ரிச்சர்ட் ராயின் நிலை குறித்த எந்த தகவலும் இதுவரை வெளியாகிவில்லை.
இந்நிலையில், ஆதனூரில் அவரது வீட்டிற்கு வரும் அக்கம் பக்கத்தினர், உறவினர்கள், ரிச்சர்ட் ராய் குறித்து அவரது தாய் தந்தையிடம் விசாரித்து வருகின்றனர்.
புனாஃப் ரிச்சர்ட் ராய் கடந்த 2019-ஆம் ஆண்டு முதல் குவைத்தில், மங்காப் என்ற இடத்தில் என்.பி.டி.சி என்ற கட்டுமான நிறுவனத்தில் Quality Officer-ஆக வேலை செய்துவருகிறார்.
ரிச்சர்ட் ராய்க்கு தாய் (லதா), தந்தை (மனோகர்) மற்றும் இளைய சகோதரர் ஒருவர் உள்ளனர். குடும்பம் ஏழ்மையாக இருந்த சூழலில், குவைத் சென்ற ரிச்சர்ட் குடும்பத்தை நல்ல நிலைமைக்கு கொண்டுவந்துள்ளனர்.
குவைத்தில் சம்பாதித்து ஆதனுரில் சொந்த நிலத்தில் வீடு ஒன்றை கட்டியுள்ளார். அந்த வீட்டின் கிரகப்பிரவேசத்திற்காக கடந்த பிப்ரவரி மாதம் ஊருக்கு வந்துள்ளார்.
இன்னும் சில காலம் குவைத்தில் வேலை செய்த்துவிட்டு, பின்னர் சொந்த ஊருக்கு திரும்பி திருமணம் செய்து கொள்ளலாம் என திட்டமிட்டிருந்தார்,
இந்நிலையில், குவைத்தில் நடந்த சம்பவம் அவரது கூடும்வந்தினரை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
தீ விபத்தில் ரிச்சர்ட் சிக்கி கொண்டதாக சந்தேகிக்கப்படுகிறது. அவரது செல்போன் சுவிட்ச் ஆஃபில் உள்ளது. உடன் இருந்த அவரது நண்பர்களுக்கும் ரிச்சர்ட்டின் நிலை குறித்து தெரியவில்லை.
ரிச்சர்ட் இறந்திருக்கலாம் என்ற சந்தேகிக்கப்படுவதால் அவரது குடும்பம் நிலை குலைந்துள்ளது. இருப்பினும் தங்கள் மகன் பத்திரமாக இருப்பான் என பெற்றோர் நம்பிக்கையோடு இருக்கின்றனர்.