;
Athirady Tamil News

உலக இளைஞர் பௌத்த சங்க சபையின் 20 ஆவது வருடாந்த மாநாடு மற்றும் உலக பௌத்த முன்னணியின் 5 ஆவது வருடாந்த மாநாடு தொடர்பான முன்னாயத்த கலந்துரையாடல்

0

உலக இளைஞர் பௌத்த சங்க சபையின் 20 ஆவது வருடாந்த மாநாடு மற்றும் உலக பௌத்த முன்னணியின் 5 ஆவது வருடாந்த மாநாடு தொடர்பான முன்னாயத்த கலந்துரையாடல்

உலக இளைஞர் பௌத்த சங்க சபையின் 20 ஆவது வருடாந்த மாநாடு மற்றும் உலக பௌத்த முன்னணியின் 5 ஆவது வருடாந்த மாநாடு தொடர்பான முன்னாயத்த கலந்துரையாடல் யாழ் மாவட்ட பதில் அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் நேற்று (13.06.2024) யாழ்ப்பாண மாவட்ட செயலக அரசாங்க அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றது.

எதிர்வரும் ஜுன் மாதம் 21 ஆம் திகதி தொடக்கம் 23 ஆம் திகதி வரை நயினாதீவு ரஜமகா விகாரையில் நடைபெறவுள்ள இந் நிகழ்விற்கு 27 நாடுகளில் இருந்து சுமார் 350 பௌத்த மத பிரதிநிதிகளின் வருகையும் இடம்பெறவுள்ளது. இதனை ஒரு தேசிய நிகழ்வாக நடாத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டு இதற்கான அனைத்து முன்னாயத்த நடவடிக்கைகளும் ஜனாதிபதி செயலகத்தினால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இக் கலந்துரையாடலில் நயினாதீவு ரஜமகா விகாரை விகாராதிபதி, யாழ்ப்பாண மாவட்டத்தினுடைய இராணுவ கட்டளைத் தளபதி, ஜனாதிபதி செயலக பணிப்பாளர் நாயகம், சிரேஸ்ட பொலிஸ் மா அதிபர், மாவட்ட செயலக மேலதிக அரசாங்க அதிபர் (காணி), யாழ் மாவட்ட செயலக பிரதம கணக்காளர், உதவி மாவட்ட செயலாளர், பௌத்த கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர், வேலணை, காரைநகர், ஊர்காவற்றுறை பிரதேச செயலாளர்கள், வேலணை பிரதேச சபை செயலாளர், மின்சார சபை மின் அத்தியட்சகர், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பிரதம பொறியியலாளர், வீதி அபிவிருத்தி திணைக்கள பிரதம பொறியியலாளர், தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை மாவட்ட பொறியியலாளர், வேலணை சுகாதார வைத்திய அதிகாரிகள், பொலிஸ் மற்றும் இராணுவ உயர் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.