;
Athirady Tamil News

விஜயதாச ராஜபக்சவுக்க எதிரான தடை: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

0

நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ச (Wijeyadasa Rajapakshe) சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக செயற்படுவதற்கு விதித்திருந்த தடையுத்தரவை மேலும் நீடிக்க நீதிமன்றம் உத்தரவு வழங்கியுள்ளது.

குறித்த உத்தரவை கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இன்று (14) வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், இந்த வழக்கு இன்று கொழும்பு மேலதிக மாவட்ட நீதிபதி சமரி வீரசூரிய முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, ​​மனுதாரர் துமிந்த திஸாநாயக்க (Duminda Dissanayake) சார்பில் சட்டத்தரணி எவரும் முன்னிலையாகவில்லை.

நீதிமன்றில் கோரிக்கை
அதன்படி, குறித்த உத்தரவை நீடிப்பது தொடர்பான கோரிக்கை எதுவும் இல்லை என்பதால், அது நீட்டிக்கப்பட மாட்டாது என்று நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில், குறித்த முறைப்பாட்டில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ள விஜயதாச ராஜபக்ச மற்றும் சரத் ஏக்கநாயக்க (Sarath Ekanayake) ஆகியோர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி ஜயமுதிதா ஜயசூரிய, நீதிமன்றில் கோரிக்கை விடுத்து பதில் மற்றும் ஆட்சேபனைகளை சமர்ப்பிக்க கால அவகாசம் கோரியுள்ளார்.

தடையுத்தரவை நீடிக்க கோரிக்கை
எனினும், அதன் பின்னர் வழக்கு மீண்டும் அழைக்கப்பட்ட போது, ​​மனுதாரின் சட்டத்தரணி நீதிமன்றில் முன்னிலையாகி சமர்ப்பணங்களை முன்வைத்து, தான் வேறொரு வழக்கில் முன்னிலையாகியிருந்ததால் இந்த வழக்கு விசாரணைக்கு முன்னிலையாக முடியவில்லை எனவும் அதன்படி, வழக்கு தொடர்பான தடையுத்தரவை நீடிக்குமாறும் கோரிக்கை விடுத்தார்.

எனவே, இந்த கோரிக்கையை ஏற்று, வழக்கு தொடர்பான பதில்கள் மற்றும் ஆட்சேபனைகளை தாக்கல் செய்வதை ஜூலை 18ஆம் திகதிக்கு ஒத்திவைத்த நீதிமன்றம், ஜூன் 28ஆம் திகதி வரை தடை உத்தரவை நீட்டித்து உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.