கனடா பிரதமர் ட்ரூடோவுக்கு மக்களிடையே குறைந்துவரும் ஆதரவு: ஆய்வு முடிவுகள்
கனடா பிரதமர் ட்ரூடோவுக்கு மக்களிடையே ஆதரவு குறைந்து வருவதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
மக்களிடையே குறைந்துவரும் ஆதரவு
கனடாவில் சமீபத்தில் Angus Reid என்னும் நிறுவனம் மேற்கொண்ட ஆய்வுகள், கனடா பிரதமரான ஜஸ்டின் ட்ரூடோவுக்கு, கனடா மக்களிடையே ஆதரவு குறைந்துவருவதைக் காட்டியுள்ளன.
ஏப்ரல் மாதத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில், 28 சதவிகித மக்கள் மட்டுமே ட்ரூடோவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். 66 சதவிகிதம் மக்கள் ஒரு பிரதமராக, ஜஸ்டின் ட்ரூடோவுக்கு தங்கள் ஆதரவு இல்லை என தெரிவித்துள்ளனர்.
கருத்துக்கணிப்புகளிலோ, ஆளும் லேபர் கட்சியைவிட எதிர்க்கட்சியான கன்சர்வேட்டிவ் கட்சிக்கு ஆதரவு அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது.
ட்ரூடோ என்ன சொல்கிறார்?
மக்கள் என்னை விரும்பவில்லை என்றாலும், கனடாவும், கனேடியர்களும் அவர்களுடைய பிள்ளைகளும் நன்றாக இருக்கிறார்கள் என்பதை உறுதி செய்ய என்ன செய்வது என்பதை யோசித்து, அதற்காக முயற்சி செய்துகொண்டே இருப்பேன் என்று கூறியுள்ளார் ட்ரூடோ.
சமீப காலமாக, இளைஞர்களின் வாக்குகளைக் கவர என்னவெல்லாம் செய்யமுடியுமோ, அதையெல்லாம் செய்துவருகிறார் ட்ரூடோ. Podcastகளில் பங்கேற்பது, பேட்டிகள் கொடுப்பது, யூடியூப் சேனல்களில் பல்வேறு விடயங்கள் குறித்து பேசுவது, ஏன் பெண்கள் கூடைப்பந்து விளையாட்டு குறித்த நிகழ்ச்சியில் கூட கலந்துகொண்டு பேசிவருகிறார் ட்ரூடோ.