பூமியில் மாறுவேடத்தில் வேற்று கிரகவாசிகள் !
வேற்று கிரகவாசிகள் மாறுவேடத்தில் இந்த பூமியில் மனிதர்களுடன் மனிதர்களாக வாழக்கூடும் என ஹவார்ட் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
அண்மையில் குறித்த பல்கலைக்கழகம் முன்னெடுத்த ஆய்வு ஒன்றின் மூலம் இந்த விடயம் வெளியிடப்பட்டுள்ளது.
மிக நீண்ட காலமாக வேற்றுக்கிரகவாசிகள் பறக்கும் தட்டுகள் தொடர்பில் ஆய்வுகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் இந்த புதிய விபரத்தை அவார்ட் பல்கலைக்கழகம் குறிப்பிட்டுள்ளது.
விஞ்ஞான ரீதியான ஆய்வுகள்
பல தசாப்தங்களாக முன்னெடுக்கப்பட்ட விஞ்ஞான ரீதியான ஆய்வுகள் மூலம் இதுவரையில் வேற்றுக்கிரகவாசிகள் தொடர்பில் தீர்க்கமான முடிவுகள் எதுவும் வெளியிடப்படவில்லை.
இவ்வாறான ஒரு பின்னணியில் ஹவாட் பல்கலைக்கழகத்தின் ஆய்வுகளில் சில முக்கிய தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
பறக்கும் தட்டுக்கள் நிலத்தின் கீழ் மறைத்து வைக்கப்பட்டிருக்கலாம் எனவும் சில வேலை அவை மனித சமூகத்துடன் ஒன்றிணைந்து போய் இருக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் வேற்று கிரகவாசிகள் அல்லது இந்த பூமிக்கு வெளியேயான விடயங்கள் பல்வேறு வடிவங்களில் இருக்கக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க அரசாங்கம்
அமெரிக்க அரசாங்கம் பாரிய அளவிலான பறக்கும் தட்டு ஒன்றை மறைத்து வைத்துள்ளதாக அண்மையில் தகவல் வெளியிடப்பட்டிருந்த நிலையில் முன்னாள் புலனாய்வு அதிகாரி ஒருவர் இந்த தகவலை குறிப்பிட்டிருந்தார்.
இந்தப் பேரண்டத்தில் நாம் தனித்து வாழ்கின்றோமா அல்லது வேறு உயிரினங்கள் பல்வேறு கிரகங்களில் காணப்படுகின்றனவா என்பது குறித்த மர்மத்தை கண்டறியும் முனைப்புகள் பல தசாப்தங்களாக முன்னெடுக்கப்பட்டு வருகின்ற போதிலும் இதுவரையில் திடமான ஆதாரங்களுடன் நிரூபிக்கப்படவில்லை.
இந்த நிலையில், ஹாவார்ட் பல்கலைக்கழகத்தின் வேற்றுக்கிரக வாசிகள் குறித்த ஆய்வு அறிக்கை இன்னமும் மீளாய்வுக்கு உட்படுத்தி உறுதிப்படுத்தப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.